1.10 கோடி..நயனதாரா பிடிவாதம்!
Wednesday, September 3, 2008
பருத்தி வீரன் கார்த்திக்கு ஜோடியாக, லிங்குச்சாமி தயாரிப்பில் நடிக்கவுள்ள புதிய படத்தில் நடிக்க ரூ. 1.10 கோடி சம்பளம் பேசப்பட்ட நயனதாரா, அந்த சம்பளத்தைக் குறைத்துக் கொள்ள மறுத்து பிடிவாதம் பிடிக்கிறாராம். இதனால் குழப்ப்பத்தில் ஆழ்ந்துள்ளார் லிங்குச்சாமி.
லிங்குச்சாமி இப்போது தயாரிப்பாளராகவும் சைடில் பட்டையைக் கிளப்பிக் கொண்டிருக்கிறார். திருப்பதி பிரதர்ஸ் என்ற பெயரில் பட நிறுவனத்தைத் தொடங்கி தீபாவளி என்ற படத்தை முதலில் தயாரித்தார். இப்படம் பெரிய வெற்றி பெற்றது.
இதையடுத்து நதியாவை முக்கிய கேரக்டரில் நடிக்க வைத்து பட்டாளம் என்ற படத்தைத் தயாரித்து வருகிறார்.
இதைத் தொடர்ந்து லிங்குச்சாமியின் இயக்கம் பிளஸ் தயாரிப்பில் புதிய படம் உருவாகவுள்ளது. இதில் கார்த்தி ஹீரோவாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக நயனதாராவை புக் செய்தனர்.
இதற்காக ரூ. 1.25 கோடி சம்பளம் கேட்டார் நயனதாரா. பேரம் பேசிய பின்னர் ரூ.1.10 கோடிக்கு படிந்தது. இதையடுத்து அவருக்கு பெரிய அமவுன்ட் ஒன்றை அட்வான்ஸ் ஆக கொடுத்தார் லிங்குச்சாமி.
ஆனால் எதிர்பாராதவிதமாக நயனதாரா நடித்த குசேலன் மற்றும் சத்யம் ஆகிய இரு படங்களும் தோல்விப் பட வரிசையில் சேர்ந்து விட்டதால் நயனதாராவின் மார்க்கெட் தள்ளாடத் தொடங்கியுள்ளது.
இதையடுத்து நயனதாராவுக்கு 1.10 கோடி சம்பளம் அதிகம் என லிங்குச்சாமி தரப்பு நினைத்தது. இதையடுத்து சம்பளத்தைக் குறைத்துக் கொள்ளுமாறு நயனதாராவிடம் கூறினர். ஆனால் அவரோ முடியவே முடியாது என்று கூறி விட்டாராம்.
மேலும், இந்த சம்பளத்திற்குத்தான் நடிப்பேன். இல்லாவிட்டால் விலகிக் கொள்கிறேன். ஆனால் அட்வான்ஸை திருப்பித் தர முடியாது என்று கூறி வருகிறாராம் நயனதாரா. இதனால் என்ன செய்வது என்று தெரியாமல் லிங்குச்சாமி குழம்பியிருக்கிறார்.
இப்படியெல்லாமா பிரச்சினை வருமா?
நன்றி தட்ஸ் தமிழ்
3 comments:
நானும் என் பங்குக்கு ஒரு கிளிக் போட்டாச்சு. கொடுத்தத திருப்பிக் கொடுக்கணும்.
ஜிம்ஷா கூகிள் விளம்பரம் தொடர்பாக தனிமடலில் உங்களின் ஆலோசனையை கூறுங்களேன்.
என் மின்மடல் முகவரி
infonellaitamil@gmail.com
கொடுத்த அட்வான்ஸ்-கு தயாரிப்பாளர், கதாநாயகன்-ன்னு எல்லாரும் வேலையே முடிச்சிட்டு, இப்போ காசை திருப்பி கேட்டா எப்படி?
நியாயமா? இது தர்மமா? ;-)
Post a Comment