சம்பளத்தை கூட்டினார் பாவனா!
Sunday, September 7, 2008
ஜெயம் கொண்டான் ஹிட் ஆகியுள்ளதால், உட்டாலக்கடியாக தனது சம்பளத்தை கூட்டி விட்டாராம் பாவனா.
ஜெயம்கொண்டான் படம் ரிலீஸாகும் வரை தெலுங்கிலேயே தனது முழு கவனத்தையும் வைத்திருந்தார் பாவனா. ஆனால் ஜெயம்கொண்டான் வெளியாகி, ஹிட் ஆகி விடவே, தற்போது பாவனாவின் கவனம் டோட்டலாக கோலிவுட் பக்கம் பாய்ந்துள்ளது.
முன்பு தமிழ்ப் படங்களை ஒப்புக் கொள்ளாமல் தெலுங்கிலேயே அதிக அக்கறை காட்டிக் கொண்டிருந்தார் பாவனா. ஆனால் இப்போது ஜெயம்கொண்டன் ஹிட் படமாகியுள்ளால் மறுபடியும் தமிழில் ஒரு கலக்கு கலக்க தீர்மானித்துள்ளாராம்.
பாவனாவைத் தேடி பல தமிழ்ப் பட வாய்ப்புகள் வருவதால் ஆற அமர உட்கார்ந்து கதை கேட்க ஆரம்பித்துள்ளாராம். கூடவே, முன்பு எனது சம்பளம் வேறு, இப்போது வேறு என்றும் சொல்லி வைத்து விட்டு கதை கேட்கிறாராம்.
இப்போது 30 லகரமாக பாவனாவின் சம்பளம் உயர்ந்துள்ளதாம். ரொம்ப நாளைக்குப் பிறகு ஒரு படம் ஓடியுள்ளது. உடனே சம்பள உயர்வா என்று புழுங்க ஆரம்பித்துள்ளனராம் தயாரிப்பாளர்கள்.
அது சரி, நயன் ரேஞ்சுக்கு உயர வேண்டாமா?
மூலம் " தட்ஸ்தமிழ்"
பாவனாவின் கேலரிக்கு செல்ல...
0 comments:
Post a Comment