ஹீரோயினுக்குப் பளார் விட்ட காதலன்!

Saturday, October 18, 2008

என்னெதிரில் ஹீரோவைக் கட்டிப் பிடிப்பதா? ஹீரோயினுக்குப் பளார் விட்ட காதலன்!

என்னெதிரிலேயே கதாநாயகனைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுப்பதா என்று ஆத்திரமடைந்த காதலன் ஹீரோயினை அடித்து காயப்படுத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அட்சயா மல்டி மீடியா எனும் நிறுவனம் தயாரித்துள்ள முதல் படம் இன்னொருவன். இந்தப் படம் மூலம் ஆதித்யா-மனோஹோ நாயகன்-நாயகியாக அறிமுகமாகின்றனர். எஸ்டி குணசேகரன் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தின் நாயகி மனோஹா புதுமுகம் என்றாலும் பிரபல நாயகிகளையும் மிஞ்சும் வகையில் படப்பிடிப்பில் தகராறு செய்து இயக்குநரையும் தயாரிப்பாளர்களையும் பஞ்சாயத்துக்குப் போகுமளவு செய்துவிட்டாராம்.

படப்பிடிப்பு நடக்கும் போதெல்லாம் தனது காதலனையும் கூட்டி வந்துவிடுவாராம். அந்தக் காதலனோ, தன் எதிரில் யாரும் மனோஹாவைத் தொட்டுவிடக் கூடாது என கண்டிஷன் போடுவாராம்.

இதில் கடுப்பான இயக்குநர், ஒருமுறை அந்தக் காதலன் எதிரிலேயே மனோஹாவை புதுக் கதாநாயகன் ஆதித்யா கட்டிப்பிடித்து முத்தம் கொடுக்கும் காட்சியை வைத்து காதலனை வெறுப்பேற்றியுள்ளார்.

இதில் ஆத்திரமடைந்த காதலன் படப்பிடிப்பு முடிந்ததும், நேராக நாயகியின் வீட்டுக்கே போய் அவரை அடித்து முகத்தில் காயம் ஏற்படுத்திவிட்டாராம்.

மேலும், இந்தப் படத்துக்காகக் கொடுத்த கால்ஷீட்டை மறந்துவிட்டு, அவள் பெயர் தமிழரசி எனும் படத்தில் மனோஹா நடிக்கப் போக அந்தப் பிரச்சினையும் தயாரிப்பாளர் கவுன்சிலுக்குப் போயிருக்கிறது.

இது எல்லாவற்றுக்கும் சிகரம் வைத்த மாதிரி இன்னொரு சமாச்சாரமும் நடந்துள்ளது.

கதாநாயகியின் கிளாமர் எடுப்பாகத் தெரிய வழக்கமாக சில சமாச்சாரங்களைப் பயன்படுத்துவார்கள் காஸ்ட்யூமர்கள். மனோஹாவோ அதை அணியமாட்டேன் என அடம் பிடித்தாராம். உடனே அவரை அனுப்பிவிட்டு ஜனவாஹினி என்பவரை டூப்பாகப் போட்டு, அழகு எடுப்பாகத் தெரியும் அளவுக்கு கவர்ச்சி சொட்டச் சொட்ட காட்சியை எடுத்து முடித்தாராம்.

இப்படி ஒருவழியாக படத்தை முடித்து நேற்று ஆடியோவும் வெளியிட்டு விட்டார்கள் இன்னொருவன் படத்துக்கு. இத்தனைப் பிரச்சினைகளை ஏற்படுத்திய மனோஹா, இந்த விழாவுக்கும் வரவில்லை.

தமிழ் திரைப்படத் தயாரிப்பாளர் கவுன்சில் செயலாளர் முரளிதரன், விநியோகஸ்தர்கள் சங்கத் தலைவர் கலைப்புலி சேகரன் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்து கொண்டு முதல் சிடியை வெளியிட டாக்டர் புஷ்பாஞ்சலி அசோகன், திருமதி மஞ்சுளா சேகர் பெற்றுக் கொண்டனர். , இசையமைப்பாளர் ஆதீஷ் உத்ரியன், நடிகர் எம்எஸ் பாஸ்கர் ஆகியோர் நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
மேலும் சினிமா செய்திகள்
ஹாலிவுட் படங்கள்...
இங்கே...

1 comments:

ers said...

இது டெஸ்ட் கமெண்ட்

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP