தீபாவளிக்கு 4 படங்கள் வெளியீடு
Saturday, November 6, 2010

தனுஷ், ஜெனிலியா நடித்துள்ள உத்தம்புத்திரன், பிரபு சாலமன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் உருவான மைனா, அர்ஜுன், ஹரிப்பிரியா நடித்துள்ள வல்லக்கோட்டை, புஷ்கர்- காயத்ரி இயக்கியுள்ள வ-குவாட்டர் கட்டிங் ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன.
மேலும், ‘ஸ்டிரீட் டான்ஸ்’ என்ற 3 டி ஆங்கிலப் படத்தின் தமிழாக்கமும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.
மைனா படத்தை உதயநிதி ஸ்டாலின் திரையிடுகிறார். புதுமுக நாயகன் விதார்த், சிந்து சமவெளி நாயகி அமலாபால் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் 170 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.
வ-குவாட்டர் கட்டிங் படத்தை வினியோகித்துள்ளது தயாநிதி அழகிரி. புஷ்கர்- காயத்ரி தம்பதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ‘மிர்ச்சி’ சிவா, லேகா வாஷிங்டன் நடித்துள்ளனர். இந்தப் படம் 150 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.
வெங்கடேஷ் இயக்கத்தில், அர்ஜுன், ஹரிப்பிரியா நடிப்பில் உருவான ‘வல்லக்கோட்டை’ 180 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.
மேலும் 20க்கும் மேற்பட்ட சிறிய பட்ஜெட் படங்கள் படபிடிப்பு முடிந்தும், திரையரங்குகள் கிடைக்காததால் வெளியிடப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன.
0 comments:
Post a Comment