தமிழில் பேச பயிற்சி எடுக்கும் கிளாமர் நடிகை
Sunday, May 4, 2008
துள்ளுவதோ இளமை படம் முலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை ஷெரீன். கடைசியாக தமிழில் அவர் நடித்த படம் உற்சாகம். அந்த படம் எதிர்பார்த்த அளவு போகாததால் உற்சாகம் இழந்த ஷெரீன் மீண்டும் மும்பைக்கு போய் செட்டிலாகி விட்டார். இந்நிலையில் ஷெரீனுக்கு எஸ்.ஜே.சூர்யாவுடன் வில் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்துள்ளது. இதுபற்றி நடிகை ஷெரீன் கூறுகையில், உற்சாகம் படம் எதிர்பார்த்த அளவு போகாவிட்டாலும் என்னை ரொம்பவே உற்சாகப்படுத்தியது. அதற்குப்பிறகு நிறைய வாய்ப்புகள் வந்தன. பொருத்தமான கேரக்டருக்காக காத்திருந்தேன். தற்போது எஸ்.ஜே.சூர்யாவுடன் வில் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறேன். இதில் சாஃப்ட்வேர் கம்பெனியில் பணியாற்றும் வேடம் என்பதால், மாடர்ன் உடையில் கிளாமராக வருவேன். மேலும், நடிப்புத் திறமையை வெளிப்படுத்தவும் வாய்ப்பு இருக்கிறது. வில்லைத் தொடர்ந்து டைரக்டர் சஞ்சய்ராம் இயக்கத்தில் ‘பூவா தலையா’ படத்தில் நடிக்கிறேன். இதில் பிராமணப் பெண் வேடம். பிராமணப் பெண்கள் எப்படி பேசுவார்கள் என்று பயிற்சி பெற்று, வசனம் பேசி நடிக்கிறேன். இப்படத்தில் முதல்முறையாக டப்பிங் பேசுகிறேன். இதற்காக தமிழில் தெளிவாக பேச பயிற்சி எடுத்து வருகிறேன், என்றார்.
0 comments:
Post a Comment