த்ரிஷா நடித்த படப்பிடிப்பில் விபத்து : இருவர் பலி

Monday, June 23, 2008

சென்னை அண்ணா சாலையில் உள்ள பார்சன் கட்டிட வளாகத்தில் நடிகர் ஆர்யா மற்றும் த்ரிஷா நடித்து வரும் சர்வம் திரைப்பட பிடிப்பு நடந்து வருகிறது. லிப்ட் அமைப்பதற்கான பணிகளில் தொழில்நுட்ப பணியாளர்கள் இருவர் ஈடுபட்டிருந்தனர்.
எதிர்பாராதவிதமாக லிப்ட்டின் ஒரு கம்பி அறுந்தது. இதையடுத்து மேலிலிருந்து பலத்த சப்தத்துடன் லிப்ட் விழுந்து நொறுங்கியது. இதில் சிகாமணி, உதயக்குமார் ஆகிய இருவர் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து விழுந்தனர். இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் அப்பு என்பவரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சூட்டிங் ரத்து
இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் இப்பட சூட்டிங் ரத்து செய்யப்பட்டது. அரங்க மேலாளர் செளந்தரராஜன், லிப்ட் ஆபரேட்டர் முருகன் ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP