நடிகை ரியாவின் இமெயில் திருட்டு
Monday, June 23, 2008
தொட்டு ... தொட்டு நனையுது தாஜ்மகால்... என்று தாஜ்மகால் படத்தில் நடிகர் மனோஜ் உடன் ஆட்டம் போட்ட பெங்காலி தேவதை ரியாசென் நினைவிருக்கிறதா. இப்போது இந்திப்படங்களில் தலைகாட்டி வருகிறார். இவர் தனது பர்சனல் இமெயில்கள் 3 வைத்திருந்தார். இது போக தனது ரசிகர்களுக்காக ஒரு வெப்சைட்டும் வைத்துள்ளார்.
இமெயில்கள் மூலமாக தனது ரசிகர்களுடன் கருத்துப்பரிமாற்றம் நடத்தி வந்த ரியாவிற்கு அதிர்ச்சி. மெயிலில் இருந்த பல தகவல்கள் திருடப்பட்டு அவைகள் அழிக்கப்பட்டிருந்தன. இப்போது வங்கிக்கணக்கு உள்ளிட்ட சில தகவல்களை தேடி வருகிறார் ரியா.
இதையடுத்து அவரது கம்யூட்டரில் ஆன்டி வைரஸ் மற்றும் ஸ்பைவேர் போட்டு அலசிக்கொண்டிருக்கிறார்கள்.
0 comments:
Post a Comment