நயன்தாரா மனசில யாரு?
Thursday, July 10, 2008
யார் மனசில் யாரு? விஜய் டிவியில் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டாலும் கூட நயன்தாரா மனசில் யார் இருக்கிறார்கள் என்று கண்டு பிடிப்பது சற்றே கடினமான காரியம் தான். இந்த வரிசையில் முதலில் சிக்கியவர் நடிகர் சிம்பு தான். வல்லவனில் நயனுடன் நெருக்கமாக நடித்த சிம்பு பின்னர் அவருடன் நட்பு ரீதியாக பிரிந்து நயனுடன் இனி நடிக்க மாட்டேன் என்ற ரேஞ்சுக்கு பேசினார்.
இதன் பின்பு நயன்தாரா வானளவு புகழ்ந்த ஒரே நடிகர் தனுஷ். ஒரே படத்தில் இணைந்து நடித்த போது பல பேட்டிகளில் தனுசை புகழ்ந்து தள்ளினார். இந்த விவகாரம் ரஜினி வரையில் செல்ல நடிகர் தனுஷ் கப்.சிப். ஆனார். இப்போது சத்யம் படத்தில் நடிகர் விஷாலுடன் நயன்தாரா இணைந்து நடித்து வருகிறார். இதிலும் விஷாலுடன் நயன்தாரா நெருக்கமான காட்சிகளில் நடித்திருக்கிறார். இதைவிட விஷால் கொடுத்த பார்ட்டி ஒன்றிலும் நயன்தாரா கலந்து கொண்டு பலரை திக்குமுக்காட செய்துள்ளார்.
தான் நடிக்கும் படங்களில் இளம் நாயகர்களுடன் இணைத்து நயன்தாரா பேசப்படுவதற்கு முக்கிய காரணமே... மார்க்கெட்டை தக்க வைக்கத்தான் என்கிறார்கள். இது போன்ற கிசுகிசுக்களை கிளப்பி விடுவதே நயன்தாராவின் எடுபிடிகள் தான் என்று ஒரு டாக் கோலிவுட்டில் நிலவுகிறது.
அது சரி நயன்தாரா மனசில் யார்தான் இருக்கிறார்கள் என்று பகிரங்கமாக கேட்டால்... அவரது அண்ணன் மகன் "குட்டிச்செல்லம்" தான் இருக்கிறார் என்று பதில் வருகிறது.
0 comments:
Post a Comment