வேர்ட்பிரசுடன் நடத்திய போராட்டத்தில் வெற்றி
Monday, July 14, 2008
தனி மனித போராட்டங்களை நாளுக்குநாள் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். ஆனால் வேர்ட்பிரஸ் நீட்சியை சொந்த சர்வரில் இணைக்க கத்துக்குட்டிகள் படும் பாடு இருக்கிறதே சொல்லி மாளாது. இந்த வகையில் நான் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக படாத பாடுபட்டு http://cinema.nellaitamil.com/t/
என்ற தளத்தை சோதித்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். தமிழில் தகவல் எழுத ஆர்.எஸ்.எஸ். முறை உள்ளதால் இத்தளம் மற்ற தளங்களை போன்று சர்ச் என்ஜினில் விரைவாக செயல்படும் என்று நம்புகிறேன். இத்தளத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை இணைப்பது தான் எப்படி என்பது தெரியவில்லை.
நன்றிகள்:
இலங்கையில் இருந்து ஊரோடி இணைய அன்பர் பகீரதன் அவர்களுக்கு மிக்க நன்றி. என்போன்ற வலை பதிவர்களுக்கு உதவும் வகையில் சொந்த தளத்தில் வேர்ட்பிரஸ் பதிவொன்றை இடுவதாக கூறியுள்ளார். அவரது பதிவு வெளிவருவதற்கு முன்னரே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
குறிப்பு
வேர்ட் பிரஸ் வித்தைகள் தெரிந்த நண்பர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ பைல்களை பதிவேற்றுவது தொடர்பாக விளக்கி கூற முடியுமா...
3 comments:
http://groups.google.com/group/tamil_wordpress குழுமத்தில் இணைந்தால் உங்கள் கேள்விகளுக்கு உடனுக்குடன் பதில் பெறலாம்.
http://codex.wordpress.org/Main_Page
http://wordpress.org/support/
தளங்களில் விரிவான உதவி கிடைக்கும்.
write post பக்கத்தில் கருவிப்பட்டையில் add media என்பதற்கு அருகில் படம், நிகழ்படங்கள் ஏற்ற பொத்தான் இருக்கிறது பாருங்கள்.
ரவிசங்கருக்கு நன்றி
write post பக்கத்தில் கருவிப்பட்டையில் add media என்பதற்கு அருகில் படங்கள் நிகழ்படங்கள் ஏற்ற பொத்தான் இருக்கிறது. ஆனால் இதிலிருந்து பதிவேற்றம் செய்யும் போது HTTP எரர் செய்தி வருகிறது.
இதே போன்று வேர்டுபிரஸ் கணக்கொன்று துவங்கிய போதும் இந்த எரர் வரத்தான் செய்தது. இதை சரி செய்ய அவதார் என்பததில் பிளாஸ் பதிவேற்றியை இணைக்க சொன்னார்கள். எப்படி செய்வது என்று எனக்கு தெரியவில்லை.
நண்பர் ரவிசங்கருக்கு நான் தங்களது இணையத்தின் மூலமாக என் சந்தேகங்களுக்கு விடை பெற முயற்சிக்கிறேன். நண்பர் பகீ மற்றும் தங்களது தளங்களில் இருந்து பல தகவல்களை பெற்றே இந்த தமிழ் முயற்சியில் வெற்றி பெற்றேன். இப்போது இந்த பதிவில் தங்களது தளம் குறித்து குறிப்பிட மறந்து விட்டேன். மன்னிக்கவும்.
//இப்போது இந்த பதிவில் தங்களது தளம் குறித்து குறிப்பிட மறந்து விட்டேன். மன்னிக்கவும்.//
அட இது ஒரு விசயமாங்க. உங்கள் பிரச்சினையை எப்படி தீர்ப்பது என்று மின்மடலில் உரையாடுவோம்.
Post a Comment