மர்மயோகி Vs ரோபோ "நையாண்டி தர்பார்"
Saturday, July 12, 2008
ஓபனிங்கே... ஒரு அடர்ந்த காடு...
கீச்..ச்ச்ச்
க்கூ.. கூ...கூகூ..
போன்ற சப்தங்கள் காடு முழுக்க வியாபித்திருக்கிறது.
நீண்டி நெடிய தாடியும்... தலையில் ஜடாமுடியுமாக நடந்து வருகிறார் மர்மயோகி.
இங்கே கட்
அடுத்த டேக்...
புதர் போன்ற கருப்பான ஒரு பொருள் திரை முழுக்க காட்டப்படுகிறது. உள்ளே இருந்து ஒரு சிட்டுக்குருவி வெளியே பறந்து வருகிறது.
காமிரா அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விரிகிறது...
சிட்டுக்குருவியை அப்படியே சில விரல்கள் தாய்மையுடன் தாங்கிக்கொள்கிறது. அந்த விரல்கள் மர்மயோகியுடையது.
அப்போது தான் இந்த வசனம் வருகிறது...
...மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித தன்மையல்ல...
...அதையும் தாண்டி புனிதமானது...
வசனங்களை தொடர்ந்து இந்த டேக் கட்.
டக்... டக்.. இந்திரத்தனமான சப்தம். சிறப்பு சப்தம்...
இயந்திர ரோபோ நடந்து வருகிறது...
ஒரு யோகி தவம் செய்து கொண்டிருக்கிறார்...
இரண்டு ஷாட்டுகளும் மாறி மாறி காட்டப்படுகிறது.
மர்மயோகியை ரோபோ நெருங்கியது.
மர்மயோகி கண்திறக்கறார்...
யாருமற்ற கானகத்தில் என் தவம் கலைத்த இயந்திரமே... யார் நீ? (வசனம் கொஞ்சம் சரித்திர வாடை வீசும். கண்டுக்கப்பிடாது.)
ஹா...ஹா... நான் யாரா? நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி.. என்ன கண்ணா வேணா நாட்டு மக்கள கேட்டுப்பார்... ரோபோ லக...லக.. சிரிப்பை உதிர்க்கிறது.
அது சரி கானகத்தில் உனக்கென்ன வேலை...
இந்தா பார்ரா... நாடே எங்களுடையது.. அப்புறம் நீ வேற காட்டப்பத்தி பேசிறீயே... இதென்னா ஜாடா முடி.. தாடி... ஒரு வயசுப்பையன் செய்யுற வேலையா இது.
சபித்து விடுவேன்.. சென்று விடு...
ஜுஜிப்பி... சாபமா.. நம்மகிட்ட இதெல்லா நடக்காது கண்ணு... ஒழுங்கு மரியாதையா எடத்தை காலி பண்ணு...
ஈஸ்வரா... இந்த கொடுமையெல்லாம் ஏம்மா... மர்மயோகி நொந்து கொள்கிறார்.
.........
தொடர்ச்சி நாளை வெளிவரும்...
ஆரோக்கியமான விமர்சனங்கள் மட்டுமே பிரசுரமாகும். கண்ட படி எழுதும் அனானிகளின் விமர்சணங்களுக்கு கத்தரி தான்.
2 comments:
அனானி பெயரில் தகாத வார்த்தைகளை எழுதிய வலைப்பதிவருக்கு கடும் கண்டணங்கள். இது போன்று பதிவை விமர்சிக்காமல் ஒட்டுமொத்தமாக தளம் குறித்து அதைச்செய்... இதைச்செய்... என்று எழுதினால் சம்மந்தப்பட்டவர்கள் வலைத்தளத்திலும் விமர்சனம் என்ற பெயரில் பின்னோட்டங்கள் இடப்படும். இது எச்சரிக்கை.
ஆஹா இப்பவே மர்மயோகி, ரோபோ சீசன ஆரம்பிச்சிட்டீங்களா????
Post a Comment