ஜோடி சேர்கிறார்கள் செந்தில்-கவுண்டமணி
Friday, July 18, 2008
இந்திர லோகத்தில் நா.அழகப்பன் படத்திற்கு பின்னர் வடிவேலுவுக்கு ஏற்பட்ட தொய்வை பயன்படுத்திக்கொண்ட நடிகர் கவுண்டமணி நீண்ட நாட்களுக்கு பின்பு தங்கம் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் பொங்கலுக்கு ரிலீசாகி கணிசமான வசூல் மழையை தந்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து வாசு. குசேலன் படத்தில் நடிக்க கவுண்டமணியை அனுகினார். ஆனாலும் குசேலனில் நடிக்க மறுத்துவிட்டார் கவுண்டமணி. ஆனால் சரத்குமாருடன் இணைந்து ஜக்குபாய் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்படத்தில் கவுண்டமணியுடன் செந்தில் ஜோடி சேர்ந்து மறுபடியும் ஒரு ரவுண்ட் வர திட்டமிட்டுள்ளனர்.
செந்தில்-கவுண்டமணி ஜோடி வைதேகி காத்திருந்தால் முதல் கரகாட்டக்காரன் வரையில் பல்வேறு சூப்பர்ஹிட் படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இடையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பல படங்களை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் விட்ட இடத்தை பிடிக்க மீண்டும் ஜோடி சேர்கின்றனர் ஜக்குபாய் படத்துக்காக.
மேலும் செய்திகள்
மதுலிகா கேலரி...
குசேலன் வண்டி வருது... விலகு விலகு...
http://tamilers.com/upcoming.php
0 comments:
Post a Comment