குசேலன் வண்டி வருது… விலகு… விலகு…
Friday, July 18, 2008
வாங்கடா வாங்க… என் வண்டிக்கு பின்னாலே… குசேலன் வண்டி வருது… விலகு… விலகு… என்று பாட்டுப்பாட போகிறார்கள் ரஜினி ரசிகர்கள். இதற்கு முக்கிய காரணம்.. ரஜினி நடித்த குசேலன் படத்திற்காக பிரத்யோகமாக பஸ் ஒன்று வடிவமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் சுற்றப்போகிறது.
குசேலன் பஸ் முழு அளவில் ரஜினி மற்றும் நயன்தாரா ஆகியோரின் படங்களை கொண்டு வண்ணம் தீட்டப்பட உள்ளது. இந்த பஸ்சில் குசேலன் பாடல்கள் ஒலிக்கப்போகிறது.
ரஜினி ரசிகர்களை கவரும் விதத்தில் குசேலன் ரஜினி படம் பொறிக்கப்பட்ட தொப்பிகள், டி-சர்ட் உள்ளிட்டவைகளும் இந்த பஸ் மூலம் விநியோகிக்கப்பட உள்ளது. இவைகள் தவிர இது வரையில் வெளியிடப்படாத குசேலன் திரைப்பட புகைப்படங்களும் இந்த பஸ்சில் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த பஸ்சை “போலாம் ரைட்” என்று விசில் அடித்து ஓ.கே சொல்லிவிட்டார் சூப்பர் ஸ்டார்.
இங்கே சொடுக்கி குசேலன் மேலும் செய்திகளை படிக்கலாம்
http://cinema.nellaitamil.com/t/
0 comments:
Post a Comment