நல்ல பதிவுகளும் மட்டறுக்கப்பட்டால் தடம் மாறும் தமிழ்சினிமா
Thursday, July 24, 2008
தமிழ்மணத்தில் ஆபாசம் இல்லாத படைப்புக்களை வெளியிட நினைத்து துவங்கப்பட்டது தான் நெல்லை தமிழ் வண்ணத்திரை. சொந்த தளத்தில் இருந்து எவ்வித கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிடாமல் சுயகட்டுப்பாட்டுடன் இதுவரையில் பதிவுகள் இடப்பட்டு வந்தன. இந்நிலையில் தமிழ்மணம் என்ன காரணத்தினால் இப்பதிவுகளை மட்டறுத்தல் செய்தது என்று தெரியவில்லை.
இதன் மூலம் தமிழ்மணம் கூறும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க கூடாது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. வழக்கமாக முகப்பில் பதிவுகளை தெரிய வைக்க கூடாது என்பதில் தமிழ்மணத்திற்கு இத்தனை காட்டம் என்று தெரிவில்லை.
நெல்லை தமிழ் வண்ணத்திரை இதழ் இனி முழுக்க முழுக்க சினிமாத்தனமாக கவர்ச்சியான புகைப்படங்கள்.... சினிமா கிசு கிசு செய்திகளுடன் வெளிவரும். கட்டுப்பாடு என்று வந்தால் அதை முறையாக கடைபிடிக்க வேண்டும். இல்லை என்றால் பதிவர்கள் தடம் புரள்வது என்பது மட்டும் நிச்சயம்.
குறி்ப்பு : தொடர்ந்து எங்காவது ஒரு மூலையில் இடுகைகள் தெரியவாவது வாய்ப்பளிக்கும் தமிழ்மணத்திற்கு நன்றி.
5 comments:
இந்த பதிவில் அனானிகள் யாரும் விமர்சிக்க வேண்டாம். மறுமொழி வெளிவராது. நன்றி.
எம் பேரு கொமாரு...
முன்னவே சொன்னோமே அனானிகள் விமர்சிக்க வேண்டாம் என்று...
தமிழ்மணம் உங்களுக்கு என்ன துரோகம் செய்தது? அதான் முகப்பிலேயே வருகிறதே...
நான் சொல்வதை சரியாக நீங்கள் புரிந்து கொள்ளவில்லை. நெல்லை தமிழ் வண்ணத்திரை என்ற சொந்த தளத்தின் பதிவுகள் தான் முகப்பு பகுதியில் வரவில்லை. அதற்காகத்தான் இந்த பதிவு
Post a Comment