எழுத்து வியாபாரிகள்.... பதிவர்களே உஷார்!

Friday, July 11, 2008

ஒரு பதிவர் (பெயரை குறிப்பிட விரும்பவில்லை தமிழ்சினிமா மற்றும் நெல்லைதமிழ் இணையதளம் துவங்கப்பட்ட பின்னர் எங்களை மெயில் மூலம் தொடர்பு கொண்டார். நான் பிரபல நாளிதழில் பணிபுரிவதாக கூறியதுடன் நெல்லை தமிழ் இணையத்தில் பங்கு கொள்ள தயார் என்று கூறினார். அதற்கு முன்னதாக நெல்லை தமிழ் இணையத்தில் சினிமா தொடர்பான செய்திகளை அதிகளவில் இடம் பெற செய்தால் நல்லது என்று கூறினார். சினிமா புகைப்படங்களுக்கு சென்னையில் நிருபர் இருப்பதாகவும் அவருக்கு மாதா மாதம் 1000 ரூபாய் பணம் கொடுக்க வேண்டியதிருக்கிறது என்று கூறி அட்வான்சாக 500 ரூபாய் பணம் வாங்கிக்கொண்டார். நானும் நெல்லை மாவட்டத்துக்காரர் தானே ஏமாற்ற மாட்டார் என்று நினைத்தேன். அதன் பின்பு தான் தெரிந்தது மாதா மாதம் பணம் கொடுக்கவேண்டும் என்ற தகவலே... இடையில் தசாவதாரம் படக்காட்சிகளை வாங்க இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்... குருவி எக்ஸ்குளுசீவ் ஸ்டில்கள் வாங்க இவ்வளவு ரூபாய் என்று சொல்லி பணம் கறக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.

நாங்கள் கொஞ்சம் உஷாராக இருந்ததால் அவர் வலையில் இருந்து மீண்டோம் இல்லையென்றால் எங்களது நெல்லை தமிழ் இணையத்தின் வெப் சர்வரையே கொடுத்து தொலைத்திருக்கவேண்டும்.

இந்த லட்சணத்தில் தான் தானும் ஒரு வலைப்பூவை தொடங்கி முழுக்க முழுக்க எழுத்து வியாபாரியாகவே மாறியிருக்கிறார். படுக்கையறை.... முத்தக்காட்சி என்று பின்னி பெடலடுத்துக்கொண்டிருக்கிறார்.

இவரது வலைப்பூவிற்கு வாசகரை வரவேற்கும் விதமாக அவரே மறுமொழிகளை பல்வேறு அனானி பெயர்களில் எழுதி தமிழ்மணத்தின் மறுமொழிகள் பட்டியலில் இடம் பிடித்து விடுகிறார். இந்த பதிவரின் இடுகைகள் தமிழ்மணத்தின் பிரதான பகுதியில் இப்போது இடம் பெறாமல் போனதற்கான காரணம் முழுக்க முழுக்க சினிமாவை வைத்து எழுத்து வியாபாரம் செய்வது தான்.

எழுத்து வியாபாரம் செய்வது குறித்து பேச உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது.... நீயும் ஒரு பதிவில் சுஜிபாலா குறித்து பேஜாரான தலைப்பை போட்டவன் தானே என்று நீங்கள் கேட்பது எனக்கும் தெரியும். இந்த பதிவும் கூட தமிழ்மணம் வாசகர்களின் நாடித்துடிப்பை அறிவதற்கு தான் போடப்பட்டது. ஆனாலும் இப்படி செய்வது சரியல்ல என்று மூத்த பதிவர்கள் சுட்டிக்காட்டிய பின்பு அதையும் நிறுத்தி விட்டோம்.

இந்த சூழலில் நாங்கள் இதையெல்லாம் ஏன் சுட்டிக்காட்டுகிறோம் என்றால் தமிழ்மணத்தில் சினிமா தனமான இடுகைகள் இடம் பெறக்கூடாது என்பதற்காக அல்ல. ஆபாச வலைகள் விரிக்கப்படுவதை தவிர்ப்பதற்காகத்தான்.

குறிப்பி்ட்ட பதிவர் யார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இவரின் திருவிளையாடல்கள் இப்போதும் தொடர்கின்றன. தமிழ்சினிமா பதிவுகளுக்கு அனானி பெயரில் யோசனைகள் என்ற பெயரில் திசைதிருப்பும் மறுமொழிகளை போடுவதுடன் அப்படி செய்தால் நல்லது... இப்படி செய்தால் நல்லது என்று விமர்சனம் செய்து வருகிறார்.

இதற்கிடையே குறைந்த நாட்களில் 10 ஆயிரம் பேர் வலைத்தளத்தை பார்த்தார்கள்... என்று கோவை சரளா ரேஞ்சில் இ.மெயிலுக்கு மெசேஜ் வேறு அனுப்புகிறார். இதே போன்று படுக்கையறை தொடர்பான தகவல்களை கொடுத்து எழுத்து வியாபாரம் செய்தால் குமுதம் ரேஞ்சுக்கு கூட போகலாம். ஆனால் தமிழ்மணம் போன்ற பல பதிவர்கள் கூடும் இடத்தில் மலத்தை கொட்டியது போல இப்பதிவர் செயல்படுவது பலருக்கும் தெரியும். சிலர் தங்கள் பதிவுகளில் இதை அங்கலாய்பாகவும் சொல்லியிருக்கிறார்கள். அது சரி இது போன்ற எழுத்து வியாபாரங்கள் குறித்து இவ்வளது தூரம் நாங்கள் எழுதியிருக்க தேவையில்லை. விமர்சனங்களை எதிர்நோக்க காத்திருக்கிறோம்.

இதை விட கொடுமை புதிதாய் இந்த பதிவர் துவங்கப்போகும் இணையத்திலும் இதே போன்று வக்கிரமான வார்த்தைகளை தெளித்து விளம்பர வருவாய் பெற்று மகிழ வாழ்த்தக்கள். நன்றி.

8 comments:

Anonymous said...

is it www.nirubar.blogspot.com?

ers said...

இதையெல்லாம் நான் விளக்க முடியாது. புரிகிறவர்களுக்கு புரியும் என்று நினைக்கிறேன்.

ரவி said...

இந்த விடயத்தை சொன்னதுக்கு நன்றி நன்பரே...

எழுத்து வியாபாரிகள் மேல் உடனே நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்மண நிர்வாகத்துக்கு எழுதுங்கள்...

ers said...

நாமக்கல் சிபி மற்றும் செந்தழல் ரவி ஆகியோருக்கு நன்றி. இருந்தாலும் சிபி நீங்கள் என்ன சொல்ல வருகிறீர்கள் என்று புரியவில்லை.

ers said...

செந்தழல் ரவிக்கு தமிழ்மணத்துக்கு புகார் கூற என்ன செய்யவேண்டும்

Anonymous said...

admin@thamizmanam.com என்ற முகவரிக்கு லெட்டர் போடவும்...

இது குறித்து விளக்கம் கேட்டு நான் இட்ட பின்னூட்டத்தை சினிமா நிருபர் பதிவு மட்டுறுத்தல் செய்யப்பட்டுவிட்டது...

தனிப்பதிவாக போடலாம் என்று இருக்கிறேன்...

ers said...

பின்னோட்டமிட்ட செந்தழல் ரவிக்கு நன்றி.

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP