ரஜினி ஒரு நடிகர் - ஆனால் நூறு அரசியல்வாதி
Saturday, August 2, 2008
அன்புள்ள ரஜினிகாந்த்…
நீங்கள் நலம் தான் என்று உலக தமிழர்களுக்கெல்லாம் தெரியும். நீங்கள் நலமிழந்தால் தமிழகம் தாங்குமா? எத்தனை ரசிகர்கள் கெரசின் பாட்டிலும் தீப்பெட்டியுமாய் ரோட்டுக்கு வருவான் என்பதும் எங்களுக்கு தெரியும்.
தமிழ் திரையுலகின் கடவுளாக கருதப்பட்ட எம்.ஜி.ஆருக்கு பிறகு உங்களை தான் உலக தமிழர்கள் இதய சிம்மாசனத்தில் ஏற்றி வைத்திருக்கிறார்கள். சிலர் உங்களை கடவுளாய் பார்த்து பாலாபிஷேகமும் செய்கிறார்கள்.
நிற்க…
எந்த வினைக்கும் எதிர்வினையுண்டு என்பது நீயூட்டனின் மூன்றாம் விதி. இந்த விதியை நீங்கள் விடுக்கும் ஒவ்வொரு வார்த்தைகள் வாயிலாக தான் ஒவ்வொரு ரசிகனும் புரிந்து கொள்கிறான்.
சரி நேரடியாகவே வருகிறேன்….
ஒகேனகல் விவகாரத்தில் நீங்கள் கன்னட வெறியர்களுக்கு எதிராக பேசிய போது… ஆகா நம் தலைவனும் தன்மான தமிழன் தான் என்று மார்தட்டிக்கொண்டோம்.
புரட்சி தமிழன் அடிக்கடி சொல்வதை போல வாழ்க! ஒழிக! கோஷம் போட்டே பழகி போன நாங்கள், உங்கள் வார்த்தைகளை கேட்டு கைதட்டி ஆர்ப்பரித்தோம். இழந்த உரிமைகளை கேட்கபோன இடத்தில் உங்கள் வருகையும், நீங்கள் பேசிய வார்த்தைகளும் எங்கள் இதயத்தில் அப்படியே பதிந்து போனது.
தொடர்ச்சியை படிக்க சொடுக்குங்கள்
5 comments:
ரஜினி இதுவரை தமிழர்களை மட்டும் தான் ஏமாற்றி வந்தார் .இப்போது கன்னடத்து மக்களை யும் மன்னிப்பு என்ற வார்தை முலம் ........................................... பணதிற்காக எதையும் செய்வார் எங்கள் தலைவர்
தியாகுவிற்கு நன்றிகள். இந்த இடுகையை பொறுத்தவரையில் தனி மனித உணர்வல்லை. இந்த உணர்வின் வெளிப்பாடு கோவையில் எதிரொலித்துள்ளது. தமிழகம் முழுவதும் இந்த உணர்வு மேலோங்க வேண்டும். நடிகனாய் பார்த்து திருந்தாவிட்டால் அவருடைய படங்களை புறக்கணித்து நாம் தமிழர் என்பதை நிரூபிப்போம். நன்றி.
ரஜினி வருத்தம் கேக்கலைன, பாதிப்பு அவருக்கு இல்லை, அவரை வைத்து படம் தயரித்தவர்களுக்குதான்.
ஏன் யாரும் புரிந்சுகிற மட்டிங்கிறிய???
இப்பல்லாம், ரஜினி உங்க எல்லருக்கும், கேலியா பொருளா???
பாவங்க ரஜினி....
வீண மொழி பிரச்சனைய உண்டக்கதிங்க...
ரஜினியின் திவிரரசிகன் என்று சொல்லிகொள்வதில் பெருமிதம் கொண்டவன் நான். ரசிகர் மன்றதிலும் உறுப்பினராகவும் உள்ளேன் . உண்மையான தமிழ் புத்தாண்டு என்பது ரஜினியின் படம் பார்க்கும்போது தான் முழுமை அடையும் என்று திரிந்த கூட்டம் நாங்கள்(ரஜினியின் படம் பெரும்பாலும் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் ) . சென்னையில் சில படங்கள் முதல் நாள் ticket கிடைக்காமல் பாண்டிச்சேரி சென்று படம் பார்த்து இருக்கின்றோம் . ரஜினி வெள்ளித்திரையில் தமிழ் மக்கள் பற்றியும் அவருக்கு கிடைத்த வாழ்வு பற்றிய பாடல்களும் கேட்டு அகம் மகிழ்ந்தவன் நான் . ரஜினியின் இந்த செயல் எனது ஏமாற்றத்தின் முழமையான வெளிபாடு இது . ஏனெனில் எங்கள் போன்ற திவிர ரசிகர் கூடத்தின் ரஜினி படம் பார்க்கும் ஆவல் காரணமாக முதல் ஒரு வாரம் ticket விலை எத்தனை மடங்கு அதிகம் என்று எல்லார்க்கும் தெரியும் . இதன் மூலம் ரஜினி வருவாய் எவ்வளவு உயர்ந்து உள்ளது என எல்லார்க்கும் தெரியும் .
பாபா போன்ற உப்பு சப்பு பெறாத படத்தை 500 ரூபாய் ticket வாங்கி பார்த்த ஒரு ரசிகனின் கோபம் இது . எங்களால் தானே அவர் ஆசியாவின் அதிக சம்பளம் பெரும் நடிகர்களில் இரண்டாம் இடத்தில் உள்ளார் .
வாங்க குரங்கு மற்றும் தியாகு இந்த பிரச்சனை குறித்து குரங்கு சொன்ன வாதம் ஏற்புடையதல்ல. அவரை வைத்து தயாரிக்கும் தயாரிப்பாளரை விட அதிக பணம் பார்க்கும் அவருக்கும் பாதிப்பு வரத்தான் செய்யும். இதே நிலை தொடரும் போது அடுத்து அவரை வைத்து படம் பண்ண மற்றவர்கள் யோசிக்கும் காலம் வரும். அந்த நாள் வெகு தொலைவில் இல்லை என்றே கருதுகிறேன்.
Post a Comment