மெகா பட்ஜெட் படங்களுக்கு ரசிகர்கள் வைத்த வேட்டு
Sunday, August 24, 2008
ஒரு காலத்தில் தமிழ்சினிமாவில் 5 கோடி மெகா பட்ஜெட்டில் தயார் செய்யப்பட்ட திரைப்படம் இது… காணத்தவறாதீர்கள்… என்று விளம்பரம் செய்தே உப்பு படத்தையும் ஓட்டி விடுவார்கள். இந்த மெகா பட்ஜெட்…. மகா நடிகர்…. ட்ரெண்டெல்லாம் இப்போது பிளாப் ஆகி கொண்டிருக்கின்றன.
கடந்த ஆண்டில் பெரும் பொருட்செலவில் தயாரித்து வெளியிடப்பட்ட வடிவேலுவின் இந்திரலோகத்தில் ந.அழகப்பன் திரைப்படம் சுமார் 30 கோடிக்கும் மேற்பட்ட இழப்பை ஏற்படுத்தியது. இந்த பாதிப்பில் இருந்து தயாரிப்பாளர் தரப்பு இன்னமும் மீளவில்லை. அந்த படத்தில் நடித்த வடிவேலுவே தனது மார்க்கெட்டை இப்போது தான் மீட்டு வருகிறார்.
இந்த நிலையில் தசாவதாரம், குசேலன், சத்யம், கந்தசாமி உள்ளிட்ட பல படங்கள் பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட்டன. குசேலன் படத்தை பொறுத்தவரையில் தமிழ், தெலுங்கு மொழிகளில் நடிகர்களுக்கு சம்பளம் கொடுக்கவே பல கோடிகள் செலவானது. அதிலும் முக்கிய நடிகருக்கு கணிசமான தொகை வழங்கப்பட்டது.
தொடர்ச்சி http://cinema.nellaitamil.com/t/?p=434
0 comments:
Post a Comment