நீயா ? நானா? தேர்தலில் ஒரு கை பார்ப்போம் - கேப்டனுக்கு வடிவேல் சவால்
Sunday, September 21, 2008
வாடா... வாடா... ஓம் பணத்துக்கும் எம் பணத்துக்கும் போட்டுப்பார்ப்போம் என்று நடிகர் வடிவேலு ஒரு படத்தில் நகைச்சுவை வசனத்தை பேசி நடிப்பார். இப்போது நிஜத்தில் இப்படி பேசி இருக்கிறார்.
நேற்று முன்தினம் வடிவேலு வீட்டின் மீது விஜயகாந்த் ரசிகர்கள் கல்வீசி தாக்கியுள்ள சம்பவம் திரைத்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாகரீக அரசியல் பேசும் விஜயகாந்த் கட்சியினர் இது போன்று நடந்து கொண்ட சம்பவம் திராவிட கட்சிகளின் செயல்களை தூக்கி சாப்பிட்டு விட்டது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு சற்றே காட்டமாக விஜயகாந்தை ஒரு பிடி பிடித்திருக்கிறார்.
நான் ஒரு நகைச்சுவை நடிகன். என்னை தாக்கி விட்டு எந்தக் கோட்டையை இவர் பிடிக்கப் போகிறார் என்று தெரியவில்லை. என்னை அடித்துதான் இவர் கோட்டையைப் பிடிக்க வேண்டுமா?. ஒரு இடத்தில்தான் ஜெயித்திருக்கிறார். அதற்கே இப்படியா?. என்னை எதற்காக குறி வைக்கிறார் என்று தெரியவில்லை. கடந்த ஒரு வருடமாகவே என்னை தாக்கி வருகிறார்கள். பலமுறை கொலை மிரட்டல்கள் விடுத்துள்ளனர். இதையெல்லாம் நான் வெளியில் சொல்லாமல் இருக்கிறேன்.
செய்தியை தொடர்ந்து படிக்க... பின்வரும் நெல்லைதமிழ் விளம்பரத்தை சொடுக்குக...
1 comments:
gimsha
mail id: jai.selvi1@gmail.com
Post a Comment