நடிகர் வடிவேலு வீட்டில் தாக்குதல்
Sunday, September 21, 2008

நடிகர் வடிவேலு வீட்டில் தாக்குதல் நடத்திய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். இச்சம்பவம் முன்விரோதம் காரணமாக நிகழ்த்தப்பட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது.
சென்னை சாலிகிராமத்தில் உள்ள நடிகர் வடிவேலுவின் வீடு மற்றும் அலுவலகங்கள் உள்ளன. நடிகர் வடிவேலு கடந்த சில நாட்களாக படப்பிடிப்பு காரணமாக வீட்டில் இல்லை. இதற்கிடையே நடிகர் வடிவேலு மற்றும் விஜயகாந்த் கட்சி தொண்டர்கள் சிலருக்கும் கடந்த சில மாதங்களுக்கு முன்பு கருத்து வேறுபாடு ஏற்பட்டது. இந்நிலையில் நேற்றிரவு நடிகர் வடிவேலுவின் வீட்டிற்குள் வாட்ச்மேனை தாக்கி சில நபர்கள் உள்ளே நுழைந்துள்ளனர். இவர்கள் அங்கிருந்த பொருட்களை அடித்து நொறுக்கிவிட்டு தலைவரை பற்றி ஏதாவது பேசினா... இது தாண்டா கதி" என்று கூறியுள்ளனர். இதையடுத்து அப்பகுதியை சேர்ந்த வடிவேலுவின் அனுசரணையாளர்கள் சிலர் அப்பகுதிக்கு வந்ததும் மர்ம ஆசாமிகள் ஓட்டம் எடுத்துள்ளனர். இச்சம்பவம் தொடர்பாக தே.மு.தி.க., தலைவர் விஜயகாந்தின் ஆதரவாளர்கள் சிலர் மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
3 comments:
கமெண்ட்?
வாங்க... எங்க வழிக்கு
Hi...
Post a Comment