பில்லா 2 படத்துக்கு சூப்பர் ஸ்டார் முழு சம்மதம்
Tuesday, May 20, 2008
ரஜினிகாந்த்தின் முழு சம்மததத்தின் அடிப்படையிலேயே பில்லா படத்தின் இரண்டாம் பாகம் தயாரிக்கப்பட உள்ளதாக செளந்தர்யா ரஜினிகாந்த் தெரிவித்துள்ளார்.
நடிகர் ரஜினிகாந்த் இளைய மகள் சவுந்தர்யாவின் சொந்த நிறுவனமாக ஆக்கர் ஸ்டுடியோ சார்பில் சுல்தான் தி வாரியார் திரைப்படத்தின் பெரும்பகுதி தயார் செய்து முடிக்கப்பட்டுள்ளன. முழு அளவில் அனிமேசன் காட்சிகளாக ரஜினிகாந்த் கதாநாயகனாக தோன்றும் இப்படம் முடிந்த கையோடு அடுத்த படத்துக்கான பூர்வாங்க பணிகளை துவங்க உள்ளார் சவுந்தர்யா ரஜினி.
இரண்டாவதாக எடுக்கப்போகும் திரைப்படம் பில்லா பார்ட் 2 தான் என்று கடந்த சில நாட்களுக்கு முன்பு ஊடகங்களில் செய்திகள் வெளியானது. வார்னர் பிரதர்ஸ் பிச்சர்ஸ் நிறுவனத்துடன் இணைந்து அச்சர் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படம் குறித்து தற்போது அப்பாவின் ஒப்புதலும் வாங்கி விட்டார் சவுந்தர்யா ரஜினி.
பில்லா படத்தின் இரண்டாம் பாகத்திலும் அஜித் தான் நடிக்க உள்ளார் என்பது உறுதியாகி விட்டது. இப்படத்தில் பில்லா படத்தின் தொழில் நுட்ப பணியாளர்கள் பலரையும் ஈடுபடுத்தவும் சவுந்தர்யா திட்டமிட்டுள்ளார். ஆனால் பில்லா 2 வை தற்போது தொடங்கப்போவதில்லை என்றும் முடிவெடுத்துள்ளார் சவுந்தர்யா. இதற்கு முக்கிய காரணம் அஜித் நடிக்கும் ஏகன் படம் தான். இப்படத்தில் நடிக்க அஜித் நீண்ட கால்சீட் அளித்துள்ளதால் பில்லா 2 ல் அஜித் நடிப்பது இயலாத காரியமாகி விடும். எனவே அஜித்துக்காகவே இந்த முடிவு.
இப்படம் தொடர்பாக தனது தந்தையிடம் பேசிய போது அவர் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தார். என்னுடைய கேரக்டரில் இன்னொருவர் இரண்டாம் பாகத்தில் நடிப்பது சந்தோஷமான விஷயம். இப்படத்துக்காக காத்திருக்கிறேன் என்று கூறியதாக சவுந்தர்யா தெரிவித்துள்ளார்.
அடுத்தாண்டு துவக்கத்தில் இப்படம் பூஜை போடப்படலாம் என்றாலும் இப்போதே கதை விவாதம் மற்றும் தொழில்நுட்ப ஆலோசனைகளை துவங்கிவிட்டார் சவுந்தர்யா.
0 comments:
Post a Comment