குருவி இயக்குனருக்கு வந்த சோதனை
Monday, May 19, 2008
உச்சத்தில் இருந்து விழுந்தால் சொச்சமும் மிஞ்சாது என்பது இயக்குனர் தரணியை பொறுத்தவரையில் உண்மையாகிவிட்டது. தமிழில் குருவி சுமாராக ஓடினாலும் (?) தெலுங்கில் அவர் இயக்கிய பங்காரம் படமும் போன மச்சான் திரும்பி வந்தான் என்ற கதையாக பேக் டூ பெவிலியன் திரும்பி விட்டது.
யார் கண் பட்டு இப்படி ஆனதோ என்று பலரும் தரணியை தேற்றிக்கொண்டிருக்கிறார்கள். ஆறுதல் சொல்வார் என்று எதிர்பார்த்த தரணியின் ஈருடல் ஓருயிர் நண்பர் விக்ரம் இது தொடர்பாக மூச் காட்டவில்லை. இது ஒருபுறமிருக்க இரு படங்களின் சரிவிலிருந்து பாதுகாக்க விக்ரமை வைத்து படம் பண்ணலாம் என்று நினைத்த தரணி அவரிடம் நேரடியாகவே கேட்டிருக்கிறார். ஆனால் விக்ரமோ சாரிப்பா நான் இப்ப ரொம்ப பிஸி... பின்னாடி பாத்துக்கலாம் என்ற ரீதியில் பேசி அனுப்பினாராம். வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும் விதமாக நண்பரே பேசியது தரணியை பீல் பண்ண வைத்து விட்டது. இவர்கள் இருவருக்கும் நெருக்கமான ஒருவரிடம் இதையெல்லாம் சொல்லி ஆசுவாசமடைந்துள்ளார் தரணி.
விஷயம் இவ்வளவு தூரம் சென்றும் கூட தரணி தனது பாணியை வரும் படங்களிலும் மாற்றிக்கொள்ளப்போவதில்லை என்று ஒரு டிவியில் கார்டூனிஸ்ட் மதனிடம் நேரடியாகவே சொன்னார். இந்த சேதி, அவரை வைத்து படம் பண்ண நினைத்த தயாரிப்பாளர்கள் மத்தியில் புளியை கரைத்துள்ளது.
1 comments:
Hi!
This is my blog, please visit it.
This blog is a work of the High School, it visit and close the page if you want.
http://elisabetmariacr91.blogspot.com
Thank you!
Post a Comment