சம்பளம் வாங்காமல் நமிதாவின் கிரிக்கெட் சேவை
Friday, May 23, 2008
நயன்தாரா நடிகையிடம் இருந்து சென்னை கிங்ஸ் தூதர் பதவி பறிக்கப்பட்ட பின்பு அப்பதவிக்கென யாரையும் முறைப்படி நியமிக்க மாட்டோம் என்ற முடிவில் இருந்து சற்றும் மாறவில்லை இந்தியா சிமெண்ட்ஸ்.
ஆனாலும் சில நடிகைகள் போட்டி போட்டுக்கொண்டு தூதர் பதவிக்கென இந்தியா சிமெண்ட் அதிகாரிகளுக்கு தூதுவிடும் நடிகைகள் பட்டியல் பெரியதாகவே இருந்தது. ஏற்கனவே ஒருவரிடம் துட்டை கொடுத்து ஏமாந்த கிரிக்கெட் நிர்வாகம் இம்முறை சர்வ ஜாக்கிரதையாக காய்நகர்த்தலை தொடங்கியுள்ளது. அதாவது தூதர் பணியாற்ற விருப்பம் உள்ளவர்களில் இருவரை தேர்ந்தெடுத்து போட்டி முடிந்த பின்பே பணப்பட்டுவாடா செய்வது என்பது தான் அந்த முடிவு.
இந்த முடிவுக்கு கட்டுப்பட்டு நடிகை நமீதா மற்றும் லட்சுமிராய் ஆகியோர் சில போட்டிகளில் தலைகாட்டினார்கள். தனது கிரிக்கெட் சகாகக்களிடம் இரவு நேர பார்ட்டி உற்சாகத்தில் நடிகை லட்சுமிராய்.... "சச்சினை தெரியும்... டோனி எனக்கு குளோஸ்.... முரளி பேட் பாய்" என்கிற ரேஞ்சில் இப்போது பிணாத்திக்கொண்டிருக்கிறார். நமீதா தனது சகாக்களிடம் கிரிக்கெட்டுக்காக சம்பளம் வாங்காமலேயே பணியாற்றி கொண்டிருப்பதாக கூறுகிறார்.
இவர்கள் இருவரின் அலட்டலை கண்டும் காணாததுமாய் உள்ளது இந்தியா சிமெண்ட்ஸ்.
0 comments:
Post a Comment