கிரிக்கெட் திருவிழா முடிந்ததும் தசாவதாரம் ( ஜுன் 6?)
Friday, May 23, 2008
இருபதுக்கு இருபது கிரிக்கெட் திருவிழா முடிந்த பின்பு ஜுன் 6ம் தேதி தசாவதாரம் படத்தை ரிலீஸ் செய்ய முடிவு செய்துள்ளார் ரவிச்சந்திரன்.
ஐபிஎல் கிரிக்கெட் திருவிழாவால் யாரோக்கு லாபமோ தெரியாது. ஆனால் தமிழக சினிமாவிற்கு கடும் நஷ்டம். இப்போட்டிகளின் காரணமாகவே ஓரளவிற்காவது ஓடியிருக்க வேண்டிய முன்னணி நடிகர்களின் படங்கள் ரிட்டன் ஆகிக்கொண்டிருக்கிறது. விஷப்பரீட்சையில் இறங்க வேண்டாம் என்று பல முன்னணி படத்தயாரிப்பு நிறுவனங்கள் தங்களின் படங்களை ரிலீஸ் செய்யாமல் காத்திருக்கின்றன.
இதற்கிடையே நீண்ட நாட்களாக பல்வேறு காரணங்களால் தாமதமாகிவரும் தசாவதாரம் படத்தை ஜுலை 6ம் தேதி திரையிட முடிவு செய்திருக்கிறார். இப்போது உலகம் முழுவதும் திரையிடுவதற்கு ஏதுவாக சுமார் 1000 பிரிண்ட் போடப்பட்டு தயார் நிலையில் உள்ளது. சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் சென்னை கிங்ஸ் அணி ஆட்டம் முடிந்த கையோடு கமலின் தசாவதாரத்தை காண தயாராகலாம்.
0 comments:
Post a Comment