ரசிகர்களின் "நாடி" பார்க்கிறார் நடிகர் விஜய்
Saturday, May 24, 2008
குருவி படம் உலகம் முழுவதும் திரையிடப்பட்டுள்ளது. இப்படம் வியாபார ரீதியாக பெருத்த பின்னடைவை சந்திக்க வில்லை என்றாலும் விஜய் ரசிகர்களை முழு அளவில் திருப்தி படுத்த தவறிவிட்டது. இந்த சூழலில் ரசிகர்களின் ரசணைக்கு ஏற்றவாறு தனது கதாபாத்திரத்தை அமைத்துக்கொள்ள முடிவு செய்துள்ளார் விஜய்.கடந்த சில படங்கள் சுமாராக போனதற்கு முக்கிய காரணம் என்ன என்பது குறித்து ரசிகர் மன்ற தரப்பில் இருந்து கருத்து கேட்கும் படலம் துவங்கியுள்ளது. ஆயினும் ரசிகர்களிடம் நேரடியாகவே நிறை, குறைகளை கேட்டு தெரிந்து கொள்வதே சிறந்த வழி என்பதை இப்போது புரிந்து கொண்டுள்ளார் விஜய். இதன் முதல் கட்டமாக அமெரிக்காவின் கலிபோர்னியாவில் உள்ள திரையரங்கில் குருவி படம் பார்க்க வந்த ரசிகர்களை சந்தித்து பேசினார் விஜய்.கடந்த பல நாட்களாகவே அமெரிக்காவில் ஓய்வு எடுத்து வரும் விஜய், அடுத்த படம் குறித்து பிரபுதேவா உள்ளிட்ட இயக்குனர்களிடம் பேசி வருகிறார். அடுத்த படத்துக்கு முன்னதாக குருவி, அழகிய தமிழ்மகன் படங்களில் ஏற்பட்ட சறுக்கல்களை சரி செய்யும் பொருட்டு கலிபோர்னியா திரையரங்கில் குருவி படம் பார்த்த ரசிகர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார். ஆனால் இது வரையில் விஜய் நடித்த பல படங்கள் அமெரிக்காவில் திரையிடப்பட்டிருந்தும் எந்த ஒரு படம் வெளியானபோதும் விஜய் இது போன்று அமெரிக்க ரசிகர்களை சந்தித்தில்லை. இப்படத்துக்கு மட்டும் விஜய் முக்கித்துவம் கொடுத்துள்ளதன் காரணம் குறித்து நிருபர்ககள் அந்நாட்டு தமிழ்பட விநியோகஸ்தர் ஜெயவேல் முருகனிடம் கேட்ட போது, தமிழர்கள் நடிகர் விஜயை பார்க்க ஆசைப்பட்டனர். அதனால் தான் இந்த சந்திப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. என்றார்.அமெரிக்காவிலும் கூட விஜய் ரசிகர்கள் விஜயிடம் இருந்து மாறுபட்ட நடிப்பை தான் எதிர்பார்க்கிறார்கள். இதனால் அடுத்த படம் வித்யாசமான கதைக்களத்துடன் தயாராகலாம் என்று நம்பப்படுகிறது.
0 comments:
Post a Comment