ஜெயம் ரவியின் வாழ்க்கையை மாற்றிய சந்தோஷ்
Friday, May 23, 2008
சந்தோஷ்சுப்பிரமணியம் திரைப்பட பாத்திரம் தனது வாழ்க்கை முறையை மாற்றிவிட்டதாக நடிகர் ஜெயம்ரவி கூறியுள்ளார்.இது தொடர்பாக ஜெயம்ரவி கூறியதாவது....என் சினிமா வாழ்க்கையில், ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ மைல்கல். சந்தோஷ் கேரக்டரில் நடித்த பிறகு என் சொந்த வாழ்க்கையிலும் நல்ல மாறுதல்களை ஏற்படுத்திக் கொண்டேன். தொடர்ந்து அண்ணன் ரவி படத்தில் நடிப்பதால் தனித்தன்மை போய்விடும் என்ற கருத்தில் உடன்பாடில்லை. அண்ணனோடு பணியாற்றுவது பெருமை. அண்ணன் நடிப்பாரா என்பது தெரியாது. நான் படம் இயக்கும்போது அவரை நடிக்க வைக்க முயற்சிப்பேன். இப்போது நடித்துக் கொண்டிருக்கும் ‘பேராண்மை’ எனக்கு இன்னொரு முக்கியமான படம். என்னுடைய படங்கள் ஜாலியான, குடும்ப சென்டிமென்டான படங்களாகவே அமைந்து விட்டது. முதன் முறையாக சமூக பொறுப்புடன் தயாராகும் படத்தில் நடிக்கிறேன் என்பதில் எனக்குப் பெருமை. பேராண்மைக்கு உடல் ரீதியாகவும், மனரீதியாகவும் நான் மாற வேண்டியது இருந்தது. கேரக்டருக்காக உடலை வருத்திக் கொள்வது எவ்வளவு சிரமமானது என்பதை அனுபவபூர்மாக உணர்ந்து கொண்டேன்.இவ்வாறு ஜெயம் ரவி கூறினார்.
0 comments:
Post a Comment