சிம்ரனின் அடுத்த இன்னிங்ஸ் -ஒரு அலசல்

Saturday, May 17, 2008







தமிழ் நடிகைகளில் கடந்த 30 ஆண்டுகளில் ரசிகர்கள் மனதில் நின்ற மூன்றே ஹீரோயின்கள் ஒருவர் பதினாறு வயதினிலே, மூன்றாம் பிறை உள்ளிட்ட படங்களின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். அவருக்கு பின்பு நாயகிகளுக்கு பஞ்சம் ஏற்பட்ட காலகட்டத்தில் (80களில்) தமிழ் சினிமாவுக்கு வந்தவர் சின்னத்தம்பி, வருஷம்16 உள்ளிட்ட பல்வேறு படங்களில் நடித்த குஷ்பு தான். இவர்கள் இருவருக்கு அடுத்தபடியாக நிண்ட நாட்கள் தமிழ்சினிமாவில் தனது சுவடுகளை பதித்த நடிகை என்றால் அவர் சிம்ரன் மட்டும் தான்.
நடிகை சிம்ரன் கடைசியாக தமிழ்சினிமாவில் கிச்சா வயசு 16 படத்தில் நடித்தார். இதன் பின்பு மும்பையை சேர்ந்த தீபக்கை மணந்து கொண்ட இவர் திருமணத்திற்கு பின்பு தெலுங்கில் பாலகிருஷ்ணாவுடன் ஓமக்காடு என்ற படத்தில் 70 வயது தள்ளாத பாட்டி வேடத்திலும், சராசரி குடும்ப பெண்ணாகவும் நடித்தார்.
தமிழ் சினிமாவிற்கு வி.ஐ.பி. திரைப்படத்தின் மூலம் அறிமுகம் ஆன சிம்ரன் இப்போது தனது கணவருடன் சென்னையில் தங்கியுள்ளார். ஜெயா டிவிக்காக பிரமீட் சாய்மீரா தயாரிக்கும் சிம்ரன் திரையில் நடித்து வரும் இவர் இப்போது திரையிலும் இரண்டாவது இன்னிங்சை விரைவில் ஆட உள்ளார். இதற்கு முக்கிய காரணம் சிம்ரன் திரைதானாம். சின்னத்திரையில் வரும் சிம்ரன் சீரியல் பல இல்லங்களை படிப்படியாக ஆக்கிரமித்துள்ளது.
இந்த காரணம் தவிர நடிப்பில் முதிர்ச்சி அடைந்த நிலையில் சொந்தப்படம் தயாரிக்க மீண்டும் நடிப்புக்களத்தில் இறங்கி ஆழம் பார்க்க நினைக்கிறார் சிம்ரன். தனது கணவருடன் சேர்ந்து சொந்த படம் எடுப்பதற்கான முயற்சிகளை அவர் மேற்கொண்டிருக்கும் நேரத்தில் திறமையான புதுமுக இயக்குனரை தேடிக்கொண்டிருக்கிறார்.
சேவல் படத்தில் நடிப்பதற்காக சிம்ரன் கடந்த பல சில மாதங்களுக்கு முன்பே ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளார். இதன் மூலம் திட்டமிட்டே மீண்டும் திரைக்கு வருகிறார் என்பது உறுதியாகிறது. இவர் மீண்டும் நடிக்கிறார் என்பதற்காக ஐந்தாம் படை என்ற படம் தயாரிக்கும் நடிகை குஷ்பு உள்ளிட்ட பலரும் இவரை அணுகியுள்ளார். இந்த சூழலில் சிம்ரன் நெல்லை மாவட்டத்தில் உள்ள குற்றாலம் பகுதியில் நடைபெறும் சேவல் திரைப்பட சூட்டிங்கில் கலந்து கொள்ள உள்ளார் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.
சிம்ரன் நடிக்கிறார் என்பதை சில நாட்களுக்கு முன்பே இயக்குனர் ஹரி செய்தியாளர்களிடம் தெரிவித்து விட்டார். இது தொடர்பாக அவரின் பேட்டியில் இருந்து சில வரிகள்...
நான் இயக்கும் 9-வது படம் இது. வாலிப முறுக்கோடு ஒரு சேவல் போல் திரியும் ஒரு கிராமத்து வாலிபன், அடைகாக்கும் கோழியாக மாறி நடக்கும் கேரக்டரில் பரத் நடிக்கிறார். நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்ரன் முக்கிய வேடத்தில் நடிக்கிறார். அவரிடம் கதையை சொன்னபோது இதுபோல் ஒரு பாத்திரத்தில் நடித்ததில்லை. இந்த வேடத்தில் பரத்தை தூக்கி சாப்பிடப் போகிறேன் பாருங்கள் என்றார். தாமிரபரணி படத்தில், பிரபுவின் மனைவிதான் நதியா என்ற சஸ்பென்ஸ் எப்படி கடைசியில்தான் தெரிந்ததோ, அது போல இதிலும் சஸ்பென்சான வேடம் சிம்ரனுக்கு. படம் முழுக்க நெல்லை தமிழில் பேசியிருக்கிறார் பரத். விரைவில் குற்றாலத்தில் படப்பிடிப்பு தொடங்குகிறது என்றார் ஹரி.
இதனிடையே வாரணம் ஆயிரம் படத்திலும் சிம்ரன் நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகயுள்ளன. இத்தனை செய்திகள் வந்த போதிலும் நேருக்கு நேர்.... வாலி... வி.ஐ.பி... படங்களில் நடித்த இளமையான சிம்ரனை அடுத்த இன்னிங்சில் காண முடியாது என்பது மறுக்க முடியாத உண்மை.



சிம்ரன் டேட்டா



இயற்பெயர் - சிம்ரன் நவால்



பிறந்த தேதி - 4.4.1976



முதல் படம் - தேரே மேரே சம்பனா (இந்தி) வி.ஐ.பி (தமிழ்)



பிறந்த ஊர் - மும்பை



படிப்பு - பேச்சுலர் ஆப் காமர்ஸ்



தாய்மொழி - பஞ்சாபி



பேசும் மொழிகள் - இந்தி, தமிழ், ஆங்கிலம்



அறிமுகம் - தூர்தர்ஷனில் சூப்பர் ஹிட் முகாபுலா ஷோ



மறக்க முடியாதது - ஜெயா பச்சனை சந்தித்தது



பிடித்த மனிதர் - கமலஹாசன்



பொழுது போக்கு - ஷாப்பிங் மற்றும் நண்பர்களுடன் அரட்டை



ஒரே விருப்பம் - நடிகர் ரஜினிகாந்த் உடன் நடிப்பது



0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP