ஊழலுக்கு ஆப்பு வைக்கும் விஜயகாந்த்
Saturday, May 17, 2008
சுந்தரா டிராவல்ஸ்' படத்தையடுத்து யுவஸ்ரீ பிக்சர்ஸ் பட நிறுவனம் சார் பில் எஸ்.வி.தங்கராஜ் தயாரித்து வரும் புதிய படம் "எங்கள் ஆசான்'.இதில் விஜயகாந்த் கதாநாயகனாக நடிக்கிறார். ஷெரில் பிரிண்டோ கதா நாயகியாக நடிக்கிறார். இன்னொரு இளம் நாயகனாக விக்ராந்த் நடிக்கி றார்.இவர்களுடன் அக்ஷயா, சுஜா, "காதல்' தண்டபாணி, இளவரசு, மயில் சாமி, முத்துக்காளை, மதன்பாப், பாலுஆனந்த், நெல்லை சிவா, ஜதிகா, ராம்கி உள்ளிட்ட பலர் நடித்துள்ள னர். கதை, திரைக்கதை அமைத்துப் படத்தை இயக்குபவர் கலைமணி.படத்தைப் பற்றி கேட்டபோது...""நீதி, நேர்மை, நியாயம் என்ற கொள்கையுடன் வங்கியில் பணியாற்றி வரும் மகேந்திரன், ஒரு வங் கிக் கிளையில் மேனேஜராகப் பொறுப்பேற்கிறார். அங்கு சென்றவு டன் வங்கியில் நடந்துள்ள ஊழலைக் கண்டுபிடிக்கிறார். ஊரில் செல்வாக்குமிக்க நபராக இருக்கும் ஒருவர்தான் ஊழலுக்குக் கார ணம் என்று தெரிய வருகிறது.தன்னை சிக்க வைக்கும் ஆதாரங் கள் அனைத்தும் வங்கியில் இருப் பதை அறிந்த அந்த செல்வாக்கு மிகுந்த நபர், வங்கியைத் தீ வைத்துக் கொளுத்திவிடுகிறார். அதில் பொது மக்களின் பணம், நகை, சொத்து பத் திரங்கள் என அனைத்தும் அழிந்து விடுகின்றன. இதனால் வங்கியை மக் கள் முற்றுகையிடுகிறார்கள். இந்தப் பிரச்னையைச் சமாளித்து, மக்கள் இழந்த சொத்துகளை மேனேஜர் எவ்வாறு பெற்றுத் தருகிறார் என் பதே கதை. வங்கி மேனேஜர் மகேந் திரனாக, விஜயகாந்த் வித்தியாச மான வேடத்தில் நடித்திருக்கிறார்.பொள்ளாச்சியில் தொடங்கிய படப் பிடிப்பு தொடர்ந்து நடைபெற்று வருகிறது'' என்றார் இயக்குநர்.வசனம் -வேலுமணி. இசை -சபேஷ்-முரளி. பாடல்கள் -முத்து லிங்கம், பா.விஜய், சினேகன். ஒளிப்பதிவு -ஏ.வெங்கடேஷ். சண் டைப் பயிற்சி -ராக்கிராஜேஷ்.
0 comments:
Post a Comment