அண்ணாவின் கதையும் படமாகிறது
Sunday, May 4, 2008
காமராஜர், பாரதியார், பெரியார் உள்ளட்டவர்களின் கதைகள் தமிழ்சினிமாவில் திரைப்படங்களாக தயாரிக்கப்பட்டுள்ளன. வர்த்தக ரீதியில் அல்லாமல் மற்றவர்களுக்கு படிப்பினை ஏற்படுத்தும் காவியங்களாக தயார் செய்யப்பட்டுள்ள இத்திரைப்படங்கள் வரிசையில் அண்ணாவின் கதையும் திரைப்படமாக வெளிவர இருக்கிறது.
அண்ணாவின் மகன் டாக்டர் பரிமளத்தின் உதவியுடன் அவரது கதையை எழுதியுள்ளார் தீண்ட... திண்ட... என்ற திரைப்படத்தை இயக்கிய ஏ.பி.முகன் என்பவர் தான் கதையுடன் தயாரிப்பாளர்களை சந்தித்து வருகிறார். கலையுலகில் அண்ணா குறித்த சம்பவங்கள் மட்டுமே இப்படத்தில் இடம் பெறுகிறது. அரசியல் என்று வந்தால் யார்...யாரையோ திருப்திபடுத்த காட்சிகளை சிதைக்க வேண்டிய நிலை உருவாகும் என்று தெரிந்தே அரசியல் வாழ்க்கை வேண்டாம் முடிவு செய்துள்ளார் முகன். இப்படத்தில் அண்ணாவாக நடிக்கப்போகிறவர் யார் என்பது தனக்கு மட்டுமே தெரிந்த ரகசியமாக இருக்கட்டும் என்று கூறிவருகிறார் முகன்.
0 comments:
Post a Comment