எங்கள் ஆசான் படத்தில் ஷெரிலுக்கு மீண்டும் வாய்ப்பு
Sunday, May 18, 2008
அரசாங்கம் படத்தில் விஜயகாந்த் ஜோடியாக நடித்த ஷெரில் பிரின்டோ எங்கள் ஆசான் படத்தில் நகராட்சி தலைவியாக நடிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அரசாங்கம் படத்தில் நடித்தவர் ஷெரில். மீண்டும் விஜயகாந்த்துடன் எங்கள் ஆசான் படத்தில் நடிப்பது குறித்து அவர் கூறியதாவது:
அரசாங்கம் படத்தில் விஜயகாந்துக்கு ஜோடியாக நடிக்கவில்லையே என்ற வருத்தம் இருந்தது.
அது இந்த படத்தால் விலகிவிட்டது. அதே நேரம் இதில் துளியும் கிளாமர் இல்லாமல் நடிக்க உள்ளேன். கிராமத்து பெண், படித்து நகராட்சி தலைவி ஆகிறாள். மிகவும் சீரியசான கேரக்டர். மிடுக்கும் பேச்சில் மிரட்டலும் கொண்ட வேடம். இந்த கேரக்டருக்கு படத்தில் உள்ள முக்கியத்துவம் காரணமாக அவருக்கு (விஜயகாந்த்) ஜோடியாக நடிக்காதது ஏமாற்றம் அளிக்கவில்லை. இந்தப் படத்துக்காக நிறைய விஷயங்களை கற்றேன். முதல் ஷெட்யூல் பொள்ளாச்சியில் 20 நாட்கள் நடந்தது. விரைவில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடக்கும்.
இவ்வாறு ஷெரில் கூறினார்.

0 comments:
Post a Comment