ஜோதிகாவின் நடிப்பால் பிரம்மித்த கரீனா கபூர்

Monday, May 19, 2008


நடிகை ஜோதிகா தமிழ் திரைப்படத்துறையில் நல்ல நடிகை என்று பெயர் எடுத்தவர். அவருடைய முகபாவங்கள் மற்றும் அதிகம் கவர்ச்சி இல்லாத நடிப்பு ஆகியவை அனைவரையும் ஈர்க்கும் விஷயம். ஜோ வின் நடிப்பாற்றலுக்கு மகுடம் வைத்தது போல ராதாமோகன் இயக்கத்தில் வெளிவந்த மொழி படம் ஊமை பெண்ணின் உணர்வுகளை வெளிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. இப்படம் வர்த்தக ரீதியில் வெற்றியடையவில்லை என்றாலும், நல்ல கதையம்சம் மற்றும் நடிப்பு ஆகியவற்றின் காரணமாக தமிழக அரசின் பல விருதுகளை குவித்தது. இப்படத்தை கடந்த சில மாதங்களுக்கு முன்பு பார்த்த பாலிவுட் நட்சத்திரம் ஸ்ரீதேவி தனது சொந்த தயாரிப்பில் இப்படத்தை இந்தியில் மீண்டும் எடுக்க முயற்சித்து வருகிறார். தமிழில் இப்படத்தை தயாரித்த பிரகாஷ்ராஜ் இப்படத்தை இந்தியில் எடுக்க ஒப்புதலும் அளித்து விட்டார்.
இதை ஸ்ரீதேவியின் கணவர் போனிகபூர் தயாரிக்கிறார். தமிழில் இயக்கிய ராதாமோகனே ஹிந்தி யிலும் இயக்குகிறார். தன்னுடைய விழியால் "மொழி'யைச் செழுமைப்படுத்திய ஜோதிகா கேரக்டருக்கு தகுதியுடைய ஒரே இந்தி நடிகை கரீனா கபூர்தான் என்று ஸ்ரீதேவி முடிவெடுத்தார். இடையடுத்து பிரபல பாலி வுட் நடிகை கரீனா கபூரி டம் "மொழி' தமிழ்ப் படத் தின் டி.வி.டி. கொடுக்கப்பட்டுள்ளது. இப்படத்தை பார்த்த கரீனா புருவம் உயர்த்தி ஜோவின் நடிப்பை பாராட்டியுள்ளார். கரீனாவின் கால்சீட் கிடைத்ததும் இப்படம் துவக்கப்பட உள்ளதாக பாலிவுட் வட்டாரங்கள் கூறுகின்றன.
nellaitamil

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP