தமிழுக்கு இன்னொரு அம்மா நடிகை
Friday, May 23, 2008
அம்மா நடிகை லிஸ்ட்டில் இடம் பிடித்திருப்பவர் நடிகை பிரகதி. வீட்ல விஷேசங்க படத்தின் மூலம் அறிமுகமான இவர் சில தமிழ்படங்களில் நடித்தார். சொல்லிக்கொள்ளும் படியாக பாண்டியராஜனுடன் பாண்டியனின் ராஜ்ஜியத்தில் திரைப்படத்தில் நடித்தது உங்களுக்கு நினைவிருக்கலாம். கடந்த 1995ம் ஆண்டில் திருமணம் முடிந்த கையோடு அமெரிக்கா சென்ற இவர் மீண்டும் கலையுலக சேவையை தொடர வந்திருக்கிறார். நைல் நடிகை சுந்தர இயக்குனர் கம் நடிகருடன் ஆட்டம் போட்டு நடிக்கும் போது எனக்கு அம்மா கேரக்ரடர் ஆப்டாக இருக்கும் என்று அந்தோணி யார் யூனிட்டில் உள்ளவர்களிடம் கேட்டு வருகிறார். இதற்கு பொறுத்தமாக நடிகர் பிரபுவுடன் ஜோடி சேர்ந்து சிலம்பாட்டத்திலும் நடித்து வருகிறார்.தெலுங்கு சீரியல்களில் அழுதுகொண்டிருந்த இவரை நம் நாடு படத்திற்காக நடிகர் சரத்குமார் நடிக்க வைத்தார். இதற்கு பின்னர் அம்மா வேடங்கள் இவரை துரத்துகின்றன. அடுத்தடுத்து கால் சீட் புக் ஆவதால் பிஷியான செட்யூல் பிரகதிக்கு.
0 comments:
Post a Comment