சமீராவை காதலிக்கிறேனா? பிரபல கிரிக்கெட் வீரர் எஸ்கேப்
Wednesday, June 4, 2008
கிரிக்கெட் வீரர்களுடன் நடிகைகளை தொடர்பு படுத்தி பேசுவது என்பது பட்டோடி காலத்தில் இருந்தே தொன்று தொட்டு நடந்து வருகிறது. அசாரூதீன்- சங்கீதா, கங்குலி-நக்மா என்று கிரிக்கெட் ஜோடிகள் பல இடங்களில் பத்திரிகையாளர்கள் காமிரா கண்ணில் சட்டென மாட்டிக்கொள்வது சகஜமான விஷயம் தான்.
இந்த வரிசையில் சிக்கிய யுவராஜ்சிங் நடிகையின் காதல் ஏக்கத்திலேயே ஆஸ்திரேலியா டூரில் பேட்டிங்கில் சொதப்பினார். இப்போது மும்பை பத்திரிகைகளுக்கு தீனி போட்டுக்கொண்டிருப்பவர் இஷாந்த் சர்மா. இவருடன் பேசப்படும் நடிகை சமீரா ரெட்டி. இந்தியில் கவர்ச்சி புயலாக உருவெடுத்து வரும் சமீரா தமிழில் வாரணம் ஆயிரம் படத்திலும் நடித்துள்ளார்.
சமீராவிற்கும் இஷாந்த் சர்மாவிற்கும் முடிச்சு போட்டு பல பாலிவுட் பத்திரிகைகளும், இணையங்களும் போட்டி போட்டு கிசு கிசு பரப்பின. இதனாலோ என்னவோ இஷாந்திற்கு இப்போது லக் அடித்துள்ளது. பாலிவுட்டில் எடுக்கும் ஒரு படத்தில் இஷாந்த் உள்ளிட்ட சில கிரிக்கெட் வீரர்களும் நடிக்கிறார்கள்.
இப்படம் தொடர்பான செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய இஷாந்த் சர்மா, தனக்கும் சமீராவிற்கும் எந்த தொடர்பும் இல்லை என்று பேசியதுடன் ஆளை விடுங்கப்பா சாமி என்று ஓட்டம் பிடித்துள்ளார்.
0 comments:
Post a Comment