கோலிவுட்டுக்கு ரோபோ... பாலிவுட்டுக்கு லவ்ஸ்டோரி2050 ...
Thursday, June 19, 2008
தமிழ் சினிமாவில் ரோபோ திரைப்படம் பெரியதொரு எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. ஷங்கரின் இயக்கத்தில் ஐயங்கரன் பிலீம்ஸ் இன்டர்நேசனல் தயாரிக்கும் இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் இதுவரை ஏற்றிராத புதுமையான கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்க முழுக்க விஞ்ஞானத்தையும் எதிர்காலத்தையும் கருத்தில் கொண்டு தயாரிக்கப்படும் இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.
இந்த படம் குறித்து ரசிகர்கள் எதிர்பார்ப்பு எப்படியோ, அதே போல பாலிவுட்டில் நடிகர் ஹிருத்திக்ரோஷன் மற்றும் பிரியங்கா சோப்ரா நடிக்கும் லவ்ஸ்டோரி 2050 படத்துக்கும் உள்ளது. இப்படமும் 2050ம் ஆண்டில் நடக்கும் கதையாக சித்தரிக்கப்பட்டுள்ளது. இப்படத்தை அட்லாப் மற்றும் பவேஜா முவீஸ் தயாரிக்கிறது. இதனை இயக்குபவர் பிரபல இயக்குனரான பவேஜா. பெரும் பொருட்செலவில் தயாரிக்கப்பட உள்ள இப்படம் இந்தி ரசிகர்களுக்கு விருந்தளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
1 comments:
மறுமொழியிட்டால் குறைந்தா போய்விடுவீர்கள்...
Post a Comment