வீழ்த்துமா இந்த வில்? - விஜய் ரசிகர்களுக்கு கவிதை சமர்ப்பணம்
Wednesday, June 4, 2008
நாளைய தீர்ப்புக்காக
மாண்புமிகு மாணவனாய்
காதலுக்கு
மரியாதை தந்தாய்
பிரியமுடன்
நிலாவே வா என்று
நீ அழைத்த போது
துள்ளாத மனமும் துள்ளியது
என்றென்றும் காதலென
இருந்த எங்கள்
நெஞ்சினிலே நீ வர
குஷியால் மிதந்தோம்
பூவே உனக்காக
நிலாவே வாவென்று
சந்திரலேகாவுடன்
லவ் டுடே பாடினாய்
-இதெல்லாம் ஒரு காலம்
இப்போது
போக்கிரி தனமாய்
கில்லி ஆடி
அழகிய தமிழ் மகனாய்
இடம் பெற நினைக்கிறாய்
குருவியை வீழ்த்த
வில் வேறு வேண்டுமா?
நவரசமெனும்
கல் இருந்தால் போதும்
கோயம்புத்தூர் மாப்ளே
நீ நுழையத்தான்
வசந்தவாசல் காத்திருக்கு
வாய்ப்பை தவற விடாதே
என்றும் என்புடன்
-விஜய் விசிறி
(இந்த கவிதை நெல்லை தமிழ் இணையத்துக்காக பெயர் தெரியாத நம்பர் இமெயிலர் அனுப்பிய கவிதை. நெல்லை தமிழில் வெளியிட முடியாதால் இந்த இணையத்தில் வெளியிட்டுள்ளோம். நன்றி.)
1 comments:
விஜய் வாழ்க!!!
Post a Comment