காதலிக்க நேரமில்லை நடிகர்கள் கூண்டோடு மாற்றம்
Monday, June 16, 2008
இது ரீமேக் காலம்... குத்துப்பாட்டு முதல் மெலடி வரை அத்தனையும் ரீமேக்கில் பட்டையை கிளப்புது. படத்தின் டைட்டில் முதல் மொத்த படமும் ரீமேக்கில் எடுக்கப்படுவது இப்போதய வெற்றி பார்முலா. பில்லா தந்த வெற்றியின் ஊக்கத்தில் அடுத்தடுத்து பழைய படங்களின் கதைகளை தூசி தட்ட ஆரம்பித்துள்ளது தமிழ் சினிமா. இந்த வரிசையில் முத்துராமன், நாகேஷ், பாலையா, ரவிச்சந்திரன், காஞ்சனா ஆகியோர் நடித்த காதலிக்க நேரமில்லை திரைப்படம் ரீமேக் செய்யப்படுகிறது.
இந்தப்படத்தில் ரவிச்சந்திரன் ஏற்றிருந்த கதாபாத்திரத்தில் வினய்யும், முத்துராமன் வேடத்தில் பிருத்விராஜும், காஞ்சனா வேடத்தில் அசினும் நடிப்பதாக திட்டமிடப்பட்டிருந்தது. ஆனால் இப்போது இந்த பாத்திரங்கள் மாற்றப்பட்டுள்ளன. முத்துராமன் வேடத்தில் நடிகர் பசுபதி நடிக்கிறார். நாகேஷ் வேடத்தில் வடிவேலுவும் பாலாஜி வேடத்தில் பின்னணி பாடகர் எஸ்.பி.பி. யும் நடிக்கின்றனர். ரவிச்சந்திரன் வேடத்தில் யாரை நடிக்க வைப்பது என்பது தொடர்பாக டிஸ்கஷன் நடந்து வருகிறது. இந்தப்படத்தை நகைச்சுவை நடிகரும் இயக்குனருமான மனோபாலா இயக்க உள்ளார்.
0 comments:
Post a Comment