ரோபோ - கதை
Friday, June 20, 2008
H2O கார் மணிக்கு 300 கி.மீ., வேகம் சென்று சாதனை. எலெக்ரானிக் பேப்பரில் வந்த செய்தியை படித்து பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தான் கிரி.
தண்ணீரில் ஓடும் இந்த கார் 2000 ஆண்டுகளின் துவக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்டது என்பது கிரியின் நினைவுகளில் ஓடியது. தண்ணீரில் இருந்து ஹைட்ரஜனை பிரித்தெடுத்து அதன் எரிசக்தியால் இந்த கார் இயங்குகிறது என்பது அவனுக்கு தெரியாதல்ல.
இப்போது வீட்டுக்கு ரெண்டு H2O கார்கள் பயன்பாட்டில் உள்ளன. மணிக்கு 150 கி.மீ. வேகத்தில் எங்கு வேண்டுமானாலும் பயணிக்கலாம். திட்டமிட்ட இடம்... அல்லது சந்திக்கவேண்டியவரின் பெயர் மற்றும் அவரது குறியீட்டு எண்களை குறிப்பிட்டால் போதும் கார், வாகன ஓட்டி இல்லாமல் இலக்கை சென்றடையும்.
கிரி சட்டென நினைவுக்கு வந்தவனாக... " தமிழ், என்னோட மெயிலில் வாட்டர் சப்ளை பில் வந்திருக்கும் எடுத்திடு... நான் ட்யூட்டிக்கு இப்ப போகலை... நைட்ல போறேன்... கொஞ்ச நேரம் காத்துவாங்கிட்டு வர்றேன். என்று சொல்லிவிட்டு கிளம்பினான்.
உள்ளிருந்து மாத்திரை ஒன்றை எடுத்துக்கொண்டு வந்தாள் தமிழ். "ஆப்பிள் டெப்லெட் மட்டுமாவது போட்டுக்கோங்க" என்றவளின் பதிலை கூட கவனிக்காமல் கிளம்பினான் கிரி என்கிற கிரி10011.
முன்னதாக சொன்னது அப்பா அம்மா வைத்த பெயர். பின்னது அரசாங்கத்தால் வழங்கப்பட்ட அடையாளம். இங்கு யார் வேண்டுமானாலும் பேர் வைக்கலாம் ஆனால் அரசின் குறியீட்டு எண்ணையும் இணைத்துக்கொள்ள வேண்டியது கட்டாயம்.
கிரி காரை எடுத்துக்கொண்டு தனது வாய்ஸ் பாக்சில் "2097, நேஷனல் பார்க், வேளச்சேரி என்றான்.
"தங்களின் உத்தரவுக்கு நன்றி. தாங்கள் குறிப்பிட்டுள்ள இடத்திற்கு 13 நிமிடங்கள் 28 நொடிகளில் இனிமையான பயணம் காத்திருக்கிறது. குளிர்சாதனத்தை இயக்க வேண்டுமென்றால் ஆம்! என்று உத்தரவிடுங்கள்" ரோபோ மூலம் தமிழ் பெண்ணின் குரல் ஒளித்தது.
இப்போது எந்த மொழியில் வேண்டுமென்றாலும் சாப்ட்வேரை இயக்கி கொள்ளலாம். இயந்திரங்களோடு பேசும் மொழி எல்லாம் சமிக்ஞைகளாக மாற்றப்பட்டு அந்தந்த மொழிகளில் பதில்கள் கிடைக்கும். இந்தக்காரும் கூட அந்த வகையை சேர்ந்தது தான். ஒரு லிட்டர் தண்ணீரில் 160 கி.மீ. தூரம் ஓடும்.
கிரி யோசித்து முடிப்பதற்குள் நேஷனல் பார்க்கை கார் நெருங்கியது. திட்டமிட்ட படி அமைக்கப்பட்டிருந்த கார் நிறுத்துமிடத்தில் தானகவே நின்று கொண்டது.
காரில் இருந்து இறங்கியதும்... " நீங்கள் இப்போது நின்று கொண்டிருப்பது 27ம் பிளாட்பார்ம். பார்க்கினுள் செல்ல உங்களுக்கான இயங்கு சக்கரம் காத்துக்கொண்டிருக்கிறது." என்ற ரோபோ தனமான குரல் ஒலித்தது.
சக்கரத்தின் வழியாக சரியாக 2 நிமிடங்களில் பார்க் மைய பகுதியை வந்தடைந்தான் கிரி.
மையப்பகுதியில் அழகான மலர்ச்செடிகள் பதியமிடப்பட்டிருந்தன. ஒவ்வொரு செடிக்கும் கீழ் எலெக்ரானிக் எழுத்துக்களில் வருஷங்கள் ஓடிக்கொண்டிருந்தன.
கிரி தனக்கு முன்னதாக இருந்த தளத்தில் நின்று கொண்டு வளவன் 3817 என்று ஒரு முறை சொன்னான்.
உத்தரவுக்கு காத்திருந்தாற்போல் கூட்டமாக இருந்த மலர்ச்செடிகள் விலகி ஒரே ஒரு தாமரை மலர் மட்டும் முகம் காட்டியது.
கண் முன்னே வந்த மலர் பேசியது இப்படி..." நான் வளவன் 3817 . நான் 16 நாட்களாக இப்பூவில் வாசம் செய்கிறேன். என் குரோமோசெம்களை இந்த பூக்களில் புதைத்திருக்கிறேன். மேலும்....." வார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருந்தன...
கிரியின் கண்களில் இருந்து கண்ணீர்... நாக்கு வறண்டு அப்பா.... என்று நா தழுதழுத்தது.
20 comments:
//இப்படி..." நான் வளவன் 3817 . நான் 16 நாட்களாக இப்பூவில் வாசம் செய்கிறேன். என் குரோமோசெம்களை இந்த பூக்களில் புதைத்திருக்கிறேன். மேலும்....." வார்த்தைகள் தொடர்ந்து கொண்டிருந்தன...
//
வாவ்... கலக்கல் :)) அருமையான கற்பனை..
நீங்களுமா :((
முடியல்ல.. தயவு செஞ்சு மாத்தவும்..
http://senshe-kathalan.blogspot.com/2008/06/blog-post_20.html
ப்ளீஸ்... :((
நன்றி சென்ஷி. தங்கள் வருகைக்கு நன்றி.
நன்றி சென்ஷி. தங்கள் வருகைக்கு நன்றி.
//H2O கார் மணிக்கு 300 கி.மீ., வேகம் சென்று சாதனை. எலெக்ரானிக் பேப்பரில் வந்த செய்தியை படித்து பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தான் கிரி.//
நான் பெருமூச்சு விட்டது மாளவிகாவ பார்த்ததுதாங்க :-))))
ஆர்னிகா நாசர் கதை மாதிரி நல்லா விறுவிறுப்பா இருக்குங்க.
கதை நாயகன் யாருன்னு பார்த்தீங்களா...
//கதை நாயகன் யாருன்னு பார்த்தீங்களா...//
வந்த செய்தியை படித்து பெருமூச்சு விட்டுக்கொண்டிருந்தான் கிரி
நான் பெருமூச்சு விட்டது மாளவிகாவ பார்த்ததுதாங்க :-))))
ஹி ஹி ஹி ஹி அதனால தாங்க இதை சொன்னேன் :-))))
எதையோ மாற்றி பார்த்துவிட்டேன் சென்ஷி. எனக்கு சரியாக தெரியவில்லை. கொஞ்சம் டியூசன் கொடுங்களேன். நன்றி. கிரிக்கு நன்றிகள்.
மிக அருமை , ஆனால் கதையெங்கும் சுஜாதா வாசனை...
தயவு செய்து word verificationஐ தூக்குங்க
இந்த முறையில் சென்று சரி படுத்துங்க, உங்க பிளாக்கர் கணக்கில் லாகின் செய்து
settings --> comments -->Show word verification for comments-->> select "No"
அதிஷாவுக்கு நன்றி. ஆயினும் எப்படி மாற்றுவது என்று எனக்கு தெரியவில்லை. முடிந்தால் சொல்லுங்களேன். நன்றி.
இப்ப சரியா கிரி
டாப்பூ ..
கலக்கல் போங்க.. :-)
சூப்பர் :))
வெர்ட் வெரிபிகேஷன தூக்குனதுக்கு..
இப்படித்தான் அடிக்கடி ஏதாச்சும் நொள்ள்ளை சொல்லிக்கிட்டு இருப்பேன். கோச்சுக்கப்படாது என்ன.. போய்ட்டு வர்ட்டா :))
இது அதிஷாவுக்கான பிரத்யோக வரிகள்...
நான் கதை எழுதிய காலகட்டத்தில் சுஜாதாவின் வரிகளை அதிகம் படித்ததில்லை. ஆயினும் இதுவரையில் எந்தக்கதையிலும் விஞ்ஞானம் தொடர்பான கருத்துக்களையும் கையாண்டதும் கிடையாது. சில சிறுகதைகள் தமிழகத்தின் பிரபல வாரஇதழ்கள் மற்றும் தினமலரின் பிரதான இணைப்பான வாரமலரிலும் வெளிவந்திருக்கின்றன.
கவிதைகள் என்று எடுத்துக்கொண்டால் சில படைப்புக்கள் வெளியாகியுள்ளன. தங்கள் விமர்சனம் சுஜாதாவின் வாசணை உள்ளதாக தெரிவிக்கிறது. இக்கருத்தின் மூலம் சாதரண என்னை, சுஜாதா அளவிற்கு உயர்த்துகிறீர்களா.. அல்லது அவரது கருத்தை அசைபோடும் ஒரு பசுவினமாக கருதுகிறீர்களா என்பது எனக்கு தெரியவில்லை. ஆயினும் கருத்தை பதிவு செய்தமைக்கு நன்றிகள்.
அண்ணாச்சி, கதை சூப்பரா இருக்கு. கலக்குதியளே.
ஆனா உம்ம பேருதான் ஒதக்கி.
ஒரு நெருக்கம் வர மாட்டேங்குல்லா.
ஊரச் சொல்லிப்புட்டேரு, பேரைச் சொல்லும்வே.
பேரை வேணா நெல்லைதமிழ்னு கூப்பிடுங்களேன்...
கலக்கலான கதையை எழுதியிருக்கிறீர்கள் நெல்லைதமிழ்.
நெல்லைதமிழ் - ஆ
நெல்லைத்தமிழ் - ஆ
நெல்லைதமிழ் தான். இந்த பெயர் ஆங்கிலத்தில் இணையத்துக்காக சூட்டப்பட்டது. ஆங்கிலத்தில் நெல்லைத்தமிழ் என்று யாரும் டைப் செய்யமாட்டார்கள் என்பதால் இந்த நெல்லைதமிழ் என்ற பெயர். மேலும் அடிக்கடி நெல்லைதமிழ் இணையத்துக்கும் வந்திட்டு போங்க... உங்களின் மேலான ஆலோசனை மற்றும் அறிவுரைகளை எடுத்துச்சொன்னால் இணையத்தின் வளர்ச்சிக்கு தூண்டுகோலாக அமையும். நன்றி வடகரை வேலன்.
Post a Comment