விஜய் அரசியலுக்கு வருவாரா - நடிகர் விஜய் பேட்டி
Thursday, June 19, 2008
நடிகர் விஜய் அரசியல் கட்சி துவங்கப்போவதாக நாளை வெளிவரப்போகும் செய்திக்கு, முன்னதாகவே மறுப்பு தெரிவிக்கும் விதமாக நடிகர் விஜய் நெல்லை தமிழ் இணையத்துக்காக குருவி திரைப்பட படப்பிடிப்பின் போது சுந்தரேசபுரத்தில் அளித்த பேட்டி...
(குறிப்பு : சில காரணங்களுக்காக இப்பேட்டியை வெளியிடுவது தவிர்க்கப்பட்டிருந்தது)
நெல்லைதமிழ் : தமிழ் சினிமாவில் ஒரே மாதிரியான படங்கள் ஆக்ஸன் படங்களை கொடுத்து வருகிறீர்களே...
விஜய் : ரசிகர்களின் விருப்பத்தை பொறுத்தே படங்களில் நடிக்கிறேன். கில்லி மாதிரியான படங்களில் நடிக்க ரசிகர்கள் விரும்பினார்கள். அதனாலேயே இந்தப்படத்தில் நடித்து வருகிறேன்.
நெல்லைதமிழ் : இங்கு எடுக்கப்படும் காட்சிகள்....
விஜய் : இந்த காட்சிகள் படத்தில் பிரதான சண்டைக்காட்சியாக வருகிறது.
நெல்லைதமிழ் : ஓய்வில் நீங்கள் செல்லும் இடம்?
விஜய் : சப்தமில்லாமல் அமெரிக்காவில் உள்ள சங்கீதாவின் உறவினர் வீட்டுக்கு சென்று ஒருவாரகாலம் தங்குவது தான்.
நெல்லைதமிழ் : புதிய படங்கள்...
விஜய் : இப்போது புதிய படங்கள் எதுவும் கமிட் ஆகவில்லை. பிரபுதேவா பேசி வருகிறார்.
நெல்லைதமிழ் : மன்றங்களுக்காக கொடி, சின்னம் என்று ரசிகர்கள் பேசிக்கொள்கிறார்களே...
விஜய் : இதைப்பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அப்பாவிடம் தான் கேட்க வேண்டும். அப்பா எதை செய்தாலும் நல்லதுக்கு தான் செய்வார்.
நெ.த : இந்த தகவல் உண்மைதானா?
விஜய் : (ஆப் த ரெக்கார்டாக வைத்துக்கொள்ளுங்கள்) அப்பா மாவட்ட தலைவர்களை அழைத்து பேசியிருக்கிறார். பலரும் மன்றத்துக்கு கொடி வேண்டும். சின்னம் வேண்டும் என்று கேட்டிருக்கிறார்கள். அவர் என்ன முடிவு எடுத்தாலும் சரிதான்.
நெ.த. : அப்படியே ரசிகர் மன்ற கொடி அறிமுகப்படுத்தப்பட்டால் அரசியலுக்கு வருவீர்களா?
விஜய் : சிரிக்கிறார். என்னை மாட்டி விட்டுடுவீங்க போல..
நெ.த : கடைசியாய் ஒரு கேள்வி... பெரும்பாலும் அப்பாவை முன்னிலை படுத்தியே பேசுகிறீர்கள்... அவர் உங்களை அரசிலுக்கு வரச்சொல்கிறார் என்று வைத்துக்கொள்ளுங்கள். செல்வீர்களா?
விஜய் : ரசிகர்களிடம்... நீங்கள் அப்பா சொல்வதை கேட்பீர்களா... (ரசிகர்கள் ஆமாம் சொன்னார்கள்.
கடைசி கேள்விக்கு விஜயிடம் இருந்து பதில் இல்லை. ஆயினும் இந்த பேட்டி முடிந்து நான் நெல்லை வருவதற்குள் யூனிட்டில் இருந்து ஒரு உதவி இயக்குனரிடம் இருந்து போன். சார் இந்த பேட்டியை போட்டுடாதீங்க...
இப்போது சொல்லுங்கள் விஜய் அரசியலுக்கு வருவாரா மாட்டாரா?
5 comments:
தளம் குறித்த மறுமொழி... எங்கள் உயிர்ஒளி... தளத்தின் நிறை குறைகளை நீங்கள் விமர்சிப்பது... எனது விரல்களுக்கு திறனேற்றும். நன்றி.
கண்டிப்பா வருவார்!!! கொஞ்ச நாள் முன்னாடி அவர் ஒரு பொறியியல் கல்லூரி ஆரம்பிக்கப்போவதாக செய்தி வந்ததெ!! நடிகர் -> கல்வித்தந்தை -> அரசியல்... இதுவும் ஒரு ரூட்தான்....
கருத்துக்கு நன்றி.
தமிழக முதல்வர் ஆசை யாரை விட்டது
விஜய் மட்டும் என்ன விதிவிலக்கா?
வாங்க விஜய்...வருகைக்கு நன்றி
Post a Comment