பட்டிதொட்டியெங்கும் ஜுலை முதல் குசேலன் பாட்டு
Monday, June 23, 2008
குசேலன் படத்தின் பாடல்கள் வரும் ஜுலை மாதம் 1ம் தேதி ரிலீஸ் செய்யப்பட உள்ளன. இப்படத்திற்கான பணிகள் இன்னும் 82 நாட்களில் நிறைவடைய உள்ளது. கவிதாலயா மற்றும் 7 ஆர்ட்ஸ் தமிழ் ஆகிவற்றின் சார்பில் தயாரிக்கப்படும் இப்படத்தை வாசு இயக்கி வருகிறார். நடிகர் ரஜினிகாந்த், நயன்தாரா மற்றும் பசுபதி, மீனா, மம்தா மோகன்தாஸ், வடிவேலு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளமே நடித்து வரும் இப்படத்தின் பாடல் வெளியீட்டு விழா வரும் 1ம் தேதி நடக்கிறது.
இப்படத்தின் பாடல்களை சங்கர் மகாதேவன், தலேர் மெகந்தி, காளிஸ்கர், ஸ்ரேயா கோஸ்கர் உள்ளிட்டவர்கள் பாடியுள்ளனர். இப்படத்தின் ஆடியோ உரிமையை அப்பானி நிறுவனம் 2.25 கோடி ரூபாய்க்கு வாங்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.
2 comments:
பட்டிதொட்டி எங்கும் பட்டய கிளப்ப வாழ்த்துக்கள்
//இப்படத்திற்கான பணிகள் இன்னும் 82 நாட்களில் நிறைவடைய உள்ளது.//
பணிகள் முடிந்து விட்டன. நீங்கள் தவறுதலாக "இன்னும்" என்ற வார்த்தையை சேர்த்து விட்டீர்கள் என்று நினைக்கிறேன்.
tks
Post a Comment