சூட்டிங் பிசியில் சூப்பர் ஸ்டார்

Thursday, June 5, 2008


சூப்பர் ஸ்டாரின் ரசிகர்களுக்கு அடுத்த ஆண்டு நான் ஸ்டாப் கொண்டாட்டம் தான். இந்த ஆண்டில் செப்டம்பர் மாதத்திற்குள் குசேலன் திரைப்படத்தை முடிக்க முழு மூச்சாய் ஆழப்புலா உள்ளிட்ட இடங்களில் பாடல் காட்சிகள் பதிவு செய்யப்பட்டன. ரோபோ படத்திற்கான பணிகளை விரைவில் துவங்கவும் ரஜினியிடம் டேட் கேட்டு வருகிறார் ஷங்கர்.
இந்த சூழலில் தனது மகள் சவுந்தர்யா இயக்கும் சுல்தான் தி வாரியார் படமும் இறுதி கட்ட நிலையை எட்டியுள்ளது. இப்படத்தில் நடிகர் ரஜினிகாந்த் தொடர்பான சில அனிமேஷன் காட்சிகளுக்காக வியட்நாம் செல்ல உள்ளார். சில நாட்களுக்கு முன்பு ரஜினிகாந்த் இமயமலை ஆஸ்ரமத்துக்கு செல்வதாக செய்திகள் வெளியாகிய நிலையில் வியட்நாம் பயணத்துக்கான முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
தற்போதுள்ள நிலையில் ரஜினியின் குசேலனுக்கு முன்னதாகவே சுல்தான் தி வாரியார் படத்தை திரையிடுவதற்கான பணிகளை முழு மூச்சாய் செய்து வருகின்றனர். வியட்நாமில் ரஜினிகாந்த் நடிக்கும் ஒரு பாடல் காட்சி பதிவு செய்யப்பட்டு அனிமேஷன் முறையில் இவை மறுபிரதி எடுக்கப்பட உள்ளது. மூன்று படங்களுக்கும் ரஜினிகாந்த் முக்கியத்துவம் கொடுத்து நடித்து வருவதால் இவை மூன்றும் சுப்பர் டூப்பர் ஹிட்டாகும் என்று எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் ரசிகர்கள்.

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP