வல்லமை தாராயோ விமர்சனம் - புகைப்படங்கள்
Friday, June 27, 2008
மதுமிதாவின் வித்யாசமான கதையமைப்பில் உருவான வல்லமை தாராயோ படம் இன்று வெளியாகியுள்ளது.
கதை பற்றிய சிறு குறிப்பு
சாயாசிங் மற்றும் சிறீகாந்த் ஆகியோர் காதலர்கள். ஆனால் சிறீகாந்த் குடும்பத்திற்கும் சாயாசிங் குடும்பத்திற்கும் ஆகாது. இந்த நிலையில் சாயாசிங்கின் தந்தை ஆனந்த ராஜ், நகர மேம்பாட்டு அலுவலரான பார்த்திபனுக்கு சாயாசிங்கை மனமுடிக்கிறார். திருமணத்திற்கு பின்பு சாயாசிங்கை பாடாய் படுத்தும் பார்த்திபன் கடைசியல் என்ன முடிவு எடுக்கிறார் என்பதே கதை.
இப்படத்தில் கருணாஸ் ரசிகர்களை சிரிக்க முயற்சி செய்திருக்கிறார். ஆயினும் சில இடங்களில் குணச்சித்திர நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். தமிழில் ஒரு நல்ல கதையை கொடுத்த இயக்குனரை பாராட்டலாம். வக்ரங்களை தவிர்த்து இப்படத்தை குடும்பத்துடன் பார்க்கும் அளவிற்கு நல்ல நடிப்பை தந்த பார்த்திபனுக்கு ஒரு சபாஸ். இந்தப்படம் தமிழ் மற்றும் தெலுங்கில் ஒரே நேரத்தில் வெளியாகியுள்ளது.
அனைத்து புகைப்படங்களையும் காண... இங்கே சொடுக்கவும்
0 comments:
Post a Comment