விஜய் ஜெராக்ஸ் அசத்தல் - சுப்ரமணியபுரம்
Tuesday, July 8, 2008
நடிகர் விஜய் சூப்பர் ஸ்டாருக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் ஸ்டார் வரிசையை அலங்கரித்து கொண்டிருப்பவர். ஆனால் தொடர்ச்சியான தோல்விகளால் அடுத்த படத்தை வெற்றிப்படமாக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார் விஜய். ஆனால் நிஜம் ஒரு புறமிருக்க நிழலாக வந்தவர் இப்போது அசத்தலான நடிப்பாற்றலை வெளிப்படுத்தியுள்ளார்.
இவரது பெயர் ஜெய். தனது பெயரில் வி என்ற ஒற்றை எழுத்தை நீக்கி ஜெய் என பெயர் சூட்டியுள்ள இவர் நடிப்பில் சுப்பிரமணியபுரம் சூப்பர் ஹிட்டாகியுள்ளது. அடிதடி கலாட்டா... பஞ்ச் டயலாக் இல்லாமல் வெளிவந்திருக்கும் இப்படத்தை நடிகர் விஜய் ஒரு முறை பார்க்க வேண்டும் என்று அவரது ரசிகர்கள் விரும்புகின்றனர்.
பகவதி படத்தில் விஜயின் தம்பியாக நடித்த ஜெய் சென்னை 28 மூலம் நாயகர்களின் ஒருவரானார். இப்போது சுப்பிரமணிபுரத்தில் நல்ல நடிப்பாற்றலை வெளிப்படுத்தி ஜெயித்திருக்கிறார்.
சாதாரணமாக ஜெராக்ஸ்கள் தமிழ்சினிமாவில் விலைபோகாது என்பதை உடைத்தெறிந்துள்ளார் ஜெய். இப்போது விஜய் கவனிக்கவேண்டிய விஷயம் தனித்துவமான நடிப்பு தான்.
டெயில்பீஸ் " நடிகர் ஜெய் சுப்பிரமணியபுரம் நாயகியை லவ்வுகிறாராம்... உண்மையா...
மேலும்....
1 comments:
எல்லாரும் சேர்ந்து ரொம்ப எதிர்பார்ப்பை கிளப்பறீங்களே, சீக்கிரமா எப்படியாவது பார்க்கணும்
Post a Comment