Showing posts with label ஒகேனகல் விவகாரம். Show all posts
Showing posts with label ஒகேனகல் விவகாரம். Show all posts

ரஜினி ஒரு நடிகர் - ஆனால் நூறு அரசியல்வாதி

Saturday, August 2, 2008

அன்புள்ள ரஜினிகாந்த்…
நீங்கள் நலம் தான் என்று உலக தமிழர்களுக்கெல்லாம் தெரியும். நீங்கள் நலமிழந்தால் தமிழகம் தாங்குமா? எத்தனை ரசிகர்கள் கெரசின் பாட்டிலும் தீப்பெட்டியுமாய் ரோட்டுக்கு வருவான் என்பதும் எங்களுக்கு தெரியும்.
தமிழ் திரையுலகின் கடவுளாக கருதப்பட்ட எம்.ஜி.ஆருக்கு பிறகு உங்களை தான் உலக தமிழர்கள் இதய சிம்மாசனத்தில் ஏற்றி வைத்திருக்கிறார்கள். சிலர் உங்களை கடவுளாய் பார்த்து பாலாபிஷேகமும் செய்கிறார்கள்.
நிற்க…
எந்த வினைக்கும் எதிர்வினையுண்டு என்பது நீயூட்டனின் மூன்றாம் விதி. இந்த விதியை நீங்கள் விடுக்கும் ஒவ்வொரு வார்த்தைகள் வாயிலாக தான் ஒவ்வொரு ரசிகனும் புரிந்து கொள்கிறான்.
சரி நேரடியாகவே வருகிறேன்….
ஒகேனகல் விவகாரத்தில் நீங்கள் கன்னட வெறியர்களுக்கு எதிராக பேசிய போது… ஆகா நம் தலைவனும் தன்மான தமிழன் தான் என்று மார்தட்டிக்கொண்டோம்.
புரட்சி தமிழன் அடிக்கடி சொல்வதை போல வாழ்க! ஒழிக! கோஷம் போட்டே பழகி போன நாங்கள், உங்கள் வார்த்தைகளை கேட்டு கைதட்டி ஆர்ப்பரித்தோம். இழந்த உரிமைகளை கேட்கபோன இடத்தில் உங்கள் வருகையும், நீங்கள் பேசிய வார்த்தைகளும் எங்கள் இதயத்தில் அப்படியே பதிந்து போனது.
தொடர்ச்சியை படிக்க சொடுக்குங்கள்

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP