Showing posts with label பிரபாகரன். Show all posts
Showing posts with label பிரபாகரன். Show all posts

பிரபாகரன் வேடத்தில் பிரகாஷ் ராஜ்!

Friday, May 1, 2009


விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரன் வாழ்க்கை வரலாறு பற்றிய புதிய படம் தயாராகிறது. இதில் பிரபாகரன் வேடத்தில் நடிக்கப் போகிறவர் யார் தெரியுமா… நம்ம ‘செல்லம்’ பிரகாஷ் ராஜ்தான்.

ஆனால் படத்தின் இயக்குனர், தயாரிப்பாளர் யார் என்பதை இப்போதைக்கு சொல்ல மறுத்துவிட்டார் பிரகாஷ் ராஜ்.

பிரபாகரன் உருவம் மற்றும் உடல்மொழியை ஓரளவுக்காவது பிரதிபலிக்கும் நடிகர் என்று பார்த்தால், சந்தேகமில்லாமல் பிரகாஷ்ராஜ் சரியான தேர்வுதான்.

ஏற்கனவே இருவர் படத்தில் முதல்வர் கருணாநிதி வேடத்தில் வந்தார். சிறந்த நடிப்புக்காக இவருக்கு மாநில அளவில் 18 விருதுகள் கிடைத்துள்ளன. 3 தேசிய விருதுகளையும் பெற்றுள்ளார்.

பிரபாகரன் வேடத்தில் நடிக்க பிரகாஷ்ராஜை அணுகிய போது உடனே ஒப்புக்கொண்டாராம். இந்த வேடத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்துவேன் எனும் பிரகாஷ் ராஜ், அவர் பிரபாகரன் கேரக்டருக்காக தனிப்பட்ட பயிற்சி எதுவும் எடுக்கவில்லை என்றார்.

இப்போதைக்கு பிரபாகரனின் வாழ்க்கை வரலாற்றைப் படித்து வரும் பிரகாஷ் ராஜ், அவருடன் பழகிய மனிதர்களைச் சந்தித்து அவரைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் ஆர்வம் கொண்டுள்ளாராம்.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP