Showing posts with label ஷில்பா மேனன். Show all posts
Showing posts with label ஷில்பா மேனன். Show all posts

தமிழ் முறைப்படிதான் திருமணம்: ஷில்பா மேனன்

Friday, May 1, 2009


எல்லோர் வீட்டிலும் திருமணம் நடக்கும். ஆனால், நட்சத்திரங்களின் திருமணம் என்றால் எல்லோருமே அதை அறிய ஆவல் கொள்வது உண்மைதான். நட்சத்திரங்களின் திருமணத்தை அவர்களே திரும்பிப் பார்த்தால் சுவாரஸ்யம்தானே... என சுவாரஸ்யமாகப் பேசுகிறார் விஜய் டி.வி.யின் "நம்ம வீட்டு கல்யாணம்' தொகுப்பாளினி ஷில்பா மேனன்.

ஒவ்வொரு திருமணத்திலும் ஒரு சுவாரஸ்யம் அடங்கி இருக்கிறது. மோதலில் ஆரம்பித்து காதலாக உருமாறி திருமணம் ஆன கதைகளும், டீ, காரம், இனிப்பு சாப்பிட்டு விட்டு ஆற அமர உட்கார்ந்து பேசிய திருமணங்களும் நம் கலாசாரத்தில் மட்டும்தான் உண்டு.

நட்சத்திர அந்தஸ்தில் உள்ளவர்கள் தங்கள் திருமணத்தை பற்றி சுவாரஸ்யமாக பேசும் போது இரு வீட்டாருக்கும் தெரியாத பல கதைகள் வெளிவரும்போது எங்கள் நிகழ்ச்சியில் இன்னும் சுவாரஸ்யம் கூடி விடுகிறது.

பிரபலங்களினஅ திருமணத்தை அவர்கள் திரும்பிப் பார்க்கும் போது அதில் நானும் இருக்கிறேன் என்பது பெருமையாக இருக்கிறது.

இயக்குநர் கே.பாக்யராஜின் திருமணத்தைப் பற்றி பேசும் போது காதலோடு கலந்த சினிமா பற்றி பேச வேண்டும். பத்ரிநாத் திருமணம் பற்றி பேசும் போது கிரிக்கெட் கலந்த காதல் பேச வேண்டும் அப்போதுதான் நிகழ்ச்சி இனிமை பெறும். சமீபத்தில் அன்புமணி -சௌமியா திருமணம் பற்றி பேசியபோது கொஞ்சம் அரசியலையும் தெரிந்து கொண்டேன்.

தமிழ் கலாசாரத் திருமணம் எனக்கு ரொம்ப பிடிக்கும். காரணம் அதில் உள்ள பொறுமைதான். ஆனால், நான் பிறந்த கேரளத்தில் திருமணம் 5 நிமிடத்தில் முடிந்து விடும். தமிழ் முறைப்படிதான் என் திருமணம் நடக்க வேண்டும் என அப்பாவிடம் எப்போதோ அனுமதி வாங்கி விட்டேன். "எல்லோர் திருமணத்தை பற்றி பேசுகிறாயே உனக்கு திருமணம் எப்போது' என பலர் கேட்பார்கள். அவர்களிடம் "அதற்கு இன்னும் கால நேரம் இருக்கிறது என சொல்லி ஓடி வந்து விடுவேன். உண்மையாகவே அதற்கு இன்னும் நேரம் இருக்கிறது... நம்புங்கப்பா!' என்கிறார் ஷில்பா மேனன்

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP