Showing posts with label nellai tamil. Show all posts
Showing posts with label nellai tamil. Show all posts

காமடி பண்ணாதிங்கப்பா - வடிவேலு

Thursday, July 24, 2008

கவர்ச்சி நடிகைக்கு பச்சைகொடி
குசேலன் - மன்றத்தினருக்கு சுற்றறிக்கை
கர்நாடகாவில் குசேலன் வெளியாகாது
இச்செய்திகளை படிக்க சொடுக்குங்கள்

Read more...

ஜோடி சேர்கிறார்கள் செந்தில்-கவுண்டமணி

Friday, July 18, 2008

இந்திர லோகத்தில் நா.அழகப்பன் படத்திற்கு பின்னர் வடிவேலுவுக்கு ஏற்பட்ட தொய்வை பயன்படுத்திக்கொண்ட நடிகர் கவுண்டமணி நீண்ட நாட்களுக்கு பின்பு தங்கம் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் பொங்கலுக்கு ரிலீசாகி கணிசமான வசூல் மழையை தந்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து வாசு. குசேலன் படத்தில் நடிக்க கவுண்டமணியை அனுகினார். ஆனாலும் குசேலனில் நடிக்க மறுத்துவிட்டார் கவுண்டமணி. ஆனால் சரத்குமாருடன் இணைந்து ஜக்குபாய் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்படத்தில் கவுண்டமணியுடன் செந்தில் ஜோடி சேர்ந்து மறுபடியும் ஒரு ரவுண்ட் வர திட்டமிட்டுள்ளனர்.
செந்தில்-கவுண்டமணி ஜோடி வைதேகி காத்திருந்தால் முதல் கரகாட்டக்காரன் வரையில் பல்வேறு சூப்பர்ஹிட் படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இடையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பல படங்களை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் விட்ட இடத்தை பிடிக்க மீண்டும் ஜோடி சேர்கின்றனர் ஜக்குபாய் படத்துக்காக.

மேலும் செய்திகள்
மதுலிகா கேலரி...
குசேலன் வண்டி வருது... விலகு விலகு...
http://tamilers.com/upcoming.php

Read more...

மர்மயோகி Vs ரோபோ "நையாண்டி தர்பார்"

Saturday, July 12, 2008

ஓபனிங்கே... ஒரு அடர்ந்த காடு...

கீச்..ச்ச்ச்
க்கூ.. கூ...கூகூ..

போன்ற சப்தங்கள் காடு முழுக்க வியாபித்திருக்கிறது.

நீண்டி நெடிய தாடியும்... தலையில் ஜடாமுடியுமாக நடந்து வருகிறார் மர்மயோகி.

இங்கே கட்

அடுத்த டேக்...
புதர் போன்ற கருப்பான ஒரு பொருள் திரை முழுக்க காட்டப்படுகிறது. உள்ளே இருந்து ஒரு சிட்டுக்குருவி வெளியே பறந்து வருகிறது.

காமிரா அப்படியே கொஞ்சம் கொஞ்சமாய் விரிகிறது...

சிட்டுக்குருவியை அப்படியே சில விரல்கள் தாய்மையுடன் தாங்கிக்கொள்கிறது. அந்த விரல்கள் மர்மயோகியுடையது.

அப்போது தான் இந்த வசனம் வருகிறது...

...மனிதர் உணர்ந்து கொள்ள இது மனித தன்மையல்ல...
...அதையும் தாண்டி புனிதமானது...

வசனங்களை தொடர்ந்து இந்த டேக் கட்.

டக்... டக்.. இந்திரத்தனமான சப்தம். சிறப்பு சப்தம்...

இயந்திர ரோபோ நடந்து வருகிறது...

ஒரு யோகி தவம் செய்து கொண்டிருக்கிறார்...

இரண்டு ஷாட்டுகளும் மாறி மாறி காட்டப்படுகிறது.

மர்மயோகியை ரோபோ நெருங்கியது.

மர்மயோகி கண்திறக்கறார்...

யாருமற்ற கானகத்தில் என் தவம் கலைத்த இயந்திரமே... யார் நீ? (வசனம் கொஞ்சம் சரித்திர வாடை வீசும். கண்டுக்கப்பிடாது.)

ஹா...ஹா... நான் யாரா? நான் ஒரு தடவை சொன்னா நூறு தடவை சொன்ன மாதிரி.. என்ன கண்ணா வேணா நாட்டு மக்கள கேட்டுப்பார்... ரோபோ லக...லக.. சிரிப்பை உதிர்க்கிறது.

அது சரி கானகத்தில் உனக்கென்ன வேலை...

இந்தா பார்ரா... நாடே எங்களுடையது.. அப்புறம் நீ வேற காட்டப்பத்தி பேசிறீயே... இதென்னா ஜாடா முடி.. தாடி... ஒரு வயசுப்பையன் செய்யுற வேலையா இது.

சபித்து விடுவேன்.. சென்று விடு...

ஜுஜிப்பி... சாபமா.. நம்மகிட்ட இதெல்லா நடக்காது கண்ணு... ஒழுங்கு மரியாதையா எடத்தை காலி பண்ணு...

ஈஸ்வரா... இந்த கொடுமையெல்லாம் ஏம்மா... மர்மயோகி நொந்து கொள்கிறார்.

.........
தொடர்ச்சி நாளை வெளிவரும்...
ஆரோக்கியமான விமர்சனங்கள் மட்டுமே பிரசுரமாகும். கண்ட படி எழுதும் அனானிகளின் விமர்சணங்களுக்கு கத்தரி தான்.

Read more...

குசேலன் பாடல்கள் - வீடியோ (இது டெஸ்ட் மெசேஜ்)

Friday, July 11, 2008






தலைப்பிலே சொன்னோமே... ஹி...ஹி...ஹி... இது டெஸ்ட் மெசேஜ். படம் வெளிவராமா பாட்டு வந்தா நல்லாயிருக்குமா... கொஞ்சம் யோசிங்க.


Read more...

ஜில்லுன்னு நயன்தாரா... கட்டழகு விஷால் படங்கள்

சத்யம் படத்தில் காவல்துறையில் இது வரையில் வந்த கதைகளில் புதுமையை புகுத்துகிறார்களோ... இல்லையோ... நயன்தாராவை வைத்து தமிழ் சினிமா ரசிகர்களை சீட் நுனிக்கு கொண்டு வந்தே தீருவோம் என்று கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

வல்லவனை மிஞ்சும் விதமாக நயன்தாரா விஷாலுடன் ஒரு பாட்டுக்கு போட்ட ஆட்டத்திற்கான புகைப்படங்களை வெளியிட்டுள்ளது. சத்யம் படக்குழு. நெல்லை தமிழ் இணையத்தில் வெளியான படங்களில் இருந்து சில உங்கள் பார்வைக்காக...

மேலும் படங்களை இங்கே சொடுக்குங்கள்




Read more...

நயன்தாரா மனசில யாரு?

Thursday, July 10, 2008

யார் மனசில் யாரு? விஜய் டிவியில் நிகழ்ச்சி நிறுத்தப்பட்டாலும் கூட நயன்தாரா மனசில் யார் இருக்கிறார்கள் என்று கண்டு பிடிப்பது சற்றே கடினமான காரியம் தான். இந்த வரிசையில் முதலில் சிக்கியவர் நடிகர் சிம்பு தான். வல்லவனில் நயனுடன் நெருக்கமாக நடித்த சிம்பு பின்னர் அவருடன் நட்பு ரீதியாக பிரிந்து நயனுடன் இனி நடிக்க மாட்டேன் என்ற ரேஞ்சுக்கு பேசினார்.
இதன் பின்பு நயன்தாரா வானளவு புகழ்ந்த ஒரே நடிகர் தனுஷ். ஒரே படத்தில் இணைந்து நடித்த போது பல பேட்டிகளில் தனுசை புகழ்ந்து தள்ளினார். இந்த விவகாரம் ரஜினி வரையில் செல்ல நடிகர் தனுஷ் கப்.சிப். ஆனார். இப்போது சத்யம் படத்தில் நடிகர் விஷாலுடன் நயன்தாரா இணைந்து நடித்து வருகிறார். இதிலும் விஷாலுடன் நயன்தாரா நெருக்கமான காட்சிகளில் நடித்திருக்கிறார். இதைவிட விஷால் கொடுத்த பார்ட்டி ஒன்றிலும் நயன்தாரா கலந்து கொண்டு பலரை திக்குமுக்காட செய்துள்ளார்.
தான் நடிக்கும் படங்களில் இளம் நாயகர்களுடன் இணைத்து நயன்தாரா பேசப்படுவதற்கு முக்கிய காரணமே... மார்க்கெட்டை தக்க வைக்கத்தான் என்கிறார்கள். இது போன்ற கிசுகிசுக்களை கிளப்பி விடுவதே நயன்தாராவின் எடுபிடிகள் தான் என்று ஒரு டாக் கோலிவுட்டில் நிலவுகிறது.
அது சரி நயன்தாரா மனசில் யார்தான் இருக்கிறார்கள் என்று பகிரங்கமாக கேட்டால்... அவரது அண்ணன் மகன் "குட்டிச்செல்லம்" தான் இருக்கிறார் என்று பதில் வருகிறது.



Read more...

அட்டையில் அசின்... உள்ளே அழகிகள் (புகைப்படங்கள்)

Thursday, June 26, 2008

இப்போது பாலிவுட்டில் பரபரப்பு செய்தி வோக் இதழில் நடிகை அசின் இடம் பிடித்தது தான். வோக் இதழ் சினிமா சம்மந்தமில்லாதது. இவ்விதழில் பேஷன் காட்சிகளே முக்கிய இடத்தை பிடிக்கும். ஆயினும் இவ்விதழில் அவ்வப்போது நடிகைகளில் மாடலான புகைப்படங்கள் இடம் பிடிக்கும். இம்முறை அசின் அட்டையை அலங்கரித்துள்ளார்.

இவ்விதழின் உள் பக்கம் இடம் பிடித்த அழகிய இந்திய மாடல்களின் புகைப்படங்களில் சில...
தமிழ் சினிமா படங்கள் இங்கே...

Read more...

இரட்டை அர்த்தங்களை துறந்தார் எஸ்.ஜே.சூர்யா

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்த சாதாரண இளைஞன். 10 ஆண்டு கடுமையான போராட்டங்களுக்கு பின்பு சினிமா துறையில் இயக்குனராக வெற்றி பெற்று நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நியூட்டனின் மூன்றாம் விதி படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நிலையில் தனது வருங்கால திட்டங்கள் தொடர்பாக நெல்லை தமிழ் இணையத்துக்காக எஸ்.ஜே.சூர்யாவின் தொலைபேசி பேட்டி....
ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் ஏன் இத்தனை கால இடைவெளி ?
இத்தனை காலம் இடைவெளி எனக்கும் கொஞ்சம் தொடர்பாக எனக்கும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆயினும் இயக்குனர் அல்லது நடிகர் எந்த பரிமானம் எடுத்தாலும் படத்தை ரசித்து பண்ண வேண்டும் என்பதே என் விருப்பம்.
நியூட்டனின் மூன்றாம் விதி சூட்டிங்கின் போது காயம் ஏற்பட்டதாமே...
லேசான காயம் தான். ஆயினும் இது சரியானதும் தொடர்ந்து படத்தில் நடித்து வருகிறேன். படத்தில் அதிரடி காட்சிகள் நிறைய படமாக்கப்பட்டு வருகிறது.
விஜய், அஜித் என்று பல நட்சத்திரங்களை உச்சத்துக்கு கொண்டு வந்தவர் என்ற முறையில் ஏதேனும் ஒரு சில வார்த்தை...
குஷி படத்தில் நடிகர் விஜய் நடித்தர். வாலி படத்தில் நடிகர் அஜித் நடித்தார். இப்படங்களில் இவர்களின் நடிப்பு திறமையால் படம் வெற்றி பெற்றது. என் பங்கும் இதில் உண்டு என்றாலும் திறமை உள்ளவர்களுக்கு களம் எங்கு வேண்டுமானாலும் இருக்கும்.
தொடர்ச்சி..... சொடுக்கவும்

மேலும் சினிமா செய்திகள்.....

தசாவதாரம் - வசூல்ராஜா 2008?

கார்த்திகை பட தயாரிப்பாளர் கோர்ட்டுக்கு செல்ல முடிவு

தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் ராதிகா போட்டி

அதிக சம்பளம் கேட்கும் நடிகை

இந்தியில் நடிக்க போகிறார் ஸ்ருதி கமலஹாசன்

Read more...

ஜகன்மோகினியில் நமீதா துணிச்சல்

Wednesday, June 25, 2008

ஜகன்மோகினி மேலும் ஸ்டில்கள்...http://tamilers.com/upcoming.php

Read more...

த்ரிஷா நடித்த படப்பிடிப்பில் விபத்து : இருவர் பலி

Monday, June 23, 2008

சென்னை அண்ணா சாலையில் உள்ள பார்சன் கட்டிட வளாகத்தில் நடிகர் ஆர்யா மற்றும் த்ரிஷா நடித்து வரும் சர்வம் திரைப்பட பிடிப்பு நடந்து வருகிறது. லிப்ட் அமைப்பதற்கான பணிகளில் தொழில்நுட்ப பணியாளர்கள் இருவர் ஈடுபட்டிருந்தனர்.
எதிர்பாராதவிதமாக லிப்ட்டின் ஒரு கம்பி அறுந்தது. இதையடுத்து மேலிலிருந்து பலத்த சப்தத்துடன் லிப்ட் விழுந்து நொறுங்கியது. இதில் சிகாமணி, உதயக்குமார் ஆகிய இருவர் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து விழுந்தனர். இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் அப்பு என்பவரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சூட்டிங் ரத்து
இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் இப்பட சூட்டிங் ரத்து செய்யப்பட்டது. அரங்க மேலாளர் செளந்தரராஜன், லிப்ட் ஆபரேட்டர் முருகன் ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP