Showing posts with label ரஜினி ரசிகர். Show all posts
Showing posts with label ரஜினி ரசிகர். Show all posts

ரஜினி வீடு முன்பு ரசிகர் தீக்குளிக்க முயற்சி

Friday, May 1, 2009



நடிகர் ரஜினிகாந்த்தைப் பார்க்க விடாமல் வாட்ச்மேன் தடுத்ததால் கோபமடைந்த ரசிகர் ஒருவர் ரஜினி வீடு முன்பு தீக்குளிக்க முயற்சித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

ரஜினிகாந்த்தின் வீடு போயஸ்தோட்டத்தில் உள்ளது. இங்கு இன்று ஒரு ரசிகர் வந்தார். வாட்ச்மேனை அணுகி தலைவரைப் பார்க்க வேண்டும் என கூறியுள்ளார்.

ஆனால் ரஜினி வீ்ட்டில் இல்லை என்று கூறியுள்ளார் வாட்ச்மேன். ஆனால் விடாத அந்த ரசிகர் கண்டிப்பாக நான் தலைவரைப் பார்த்தே ஆக வேண்டும் என பிடிவாதமாக கூறியுள்ளார்.

ஆனால் அவரை உள்ளே அனுமதிக்க மறுத்து விட்டார் வாட்ச்மேன். இந்த நிலையில் தடீரென தன் மீது மண்ணெண்ணையை ஊற்றி தீக்குளிக்க முயற்சித்துள்ளார் அந்த ரசிகர்.

இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் பாய்ந்து அவரை தடுத்து நிறுத்தினர்.

போலீஸாருக்குத் தகவல் சென்று அவர்கள் விரைந்து வந்து அந்த நபரைப் பிடித்துச் சென்றனர். அந்த ரசிகர் விருதுநகரைச் சேர்ந்தவர் எனத் தெரிகிறது.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP