Showing posts with label tamilcinema. Show all posts
Showing posts with label tamilcinema. Show all posts

பாம்புகள் என் செல்லப்பிராணி - நடிகை மோனிகா

Tuesday, February 23, 2010

பாம்பு என்றாலே படை நடுங்கும். தொடை நடுங்கும் என்றெல்லாம் அச்சப்பட்டாலும், சினிமாவை பொறுத்தவரை பாம்பு சென்ட்டிமென்ட் பணக்கார சென்ட்டிமென்ட். அதாவது பாம்பை வைத்து படமெடுத்தால் அது ஹிட்!

இந்த நம்பிக்கையோடு வந்திருக்கிறது நஞ்சுபுரம். ராகவ், மோனிகா ஜோடியுடன் நு£ற்றுக்கணக்கான பாம்புகளும் இதில் நடித்திருப்பதுதான் விசேஷம். "பொதுவா பாம்பு கதைன்னா ஒரு பொண்ணு பாம்பா மாறி பழிவாங்குவா. கால காலமா இப்படிதான் இருந்திருக்கு. ஆனால் நாங்க வேற மாதிரி கதையை சொல்லியிருக்கோம்" என்றார் இயக்குனர் சார்லஸ்.



முதலில் மிஸ்டர் பாம்பு ராசாவை கண்டு பயந்த படத்தின் நாயகி மோனிகா, படம் முடியும்போது இப்படி செல்லமா பழகிய பாம்பை விட்டு பிரியுறமே என்று கவலைப்படுகிற அளவுக்கு திக் பிரண்டாகிவிட்டாராம் அவைகளிடம். "வீட்ல பெட் அனிமலா கூட வளர்க்கலாம். அந்தளவுக்கு பாம்புங்க ரொம்ப நல்ல பசங்க" என்று சிபாரிசு பண்ணுகிற அளவுக்கு தைரியமாகி விட்டார் மோனிகா.

படத்தின் ஹீரோ ராகவ் சின்னத்திரை பிரபலம் கூட. இந்த படத்தில் நடிப்பதற்காக நிறைய மெனக்கட்டிருக்கிறார். அதுபோக நஞ்சுபுரம் படத்தின் இசையமைப்பாளரும் இவர்தான். வசந்தின் ஏய் ரொம்ப அழகா இருக்கே படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்தவர் இவர். அதன்பின் இந்த படத்தில் முழு இசையமைப்பாளராக உயர்ந்திருக்கிறார். பாம்பு படம்னா மகுடிக்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்கும். இந்த வழக்கத்தையும் இந்த படத்திலே உடைச்சிருக்கோம் என்றார். வில்லேஜ் கதை என்றாலும் ஒரு பாடலை ராப் ஸ்டைலில் முயற்சி செய்திருக்கிறாராம்.

"பாம்புகளை பற்றிய நம்பிக்கைகள் நம்மிடம் நிறைய இருக்கு. அதையெல்லாம் தெளிவு படுத்துற படமாகவும் இது இருக்கும்" என்கிறார் சார்லஸ். படமெடுக்கிற பாம்பை வைச்சு படமெடுக்கிறாங்க. வசூலை வச்சு நாலைஞ்சு படம் எடுக்கிற அளவுக்கு நாகராஜா ஆசிர்வதிக்கப்பட்டும்...


readmore...

Read more...

குசேலன் வண்டி வருது… விலகு… விலகு…

Friday, July 18, 2008

வாங்கடா வாங்க… என் வண்டிக்கு பின்னாலே… குசேலன் வண்டி வருது… விலகு… விலகு… என்று பாட்டுப்பாட போகிறார்கள் ரஜினி ரசிகர்கள். இதற்கு முக்கிய காரணம்.. ரஜினி நடித்த குசேலன் படத்திற்காக பிரத்யோகமாக பஸ் ஒன்று வடிவமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் சுற்றப்போகிறது.
குசேலன் பஸ் முழு அளவில் ரஜினி மற்றும் நயன்தாரா ஆகியோரின் படங்களை கொண்டு வண்ணம் தீட்டப்பட உள்ளது. இந்த பஸ்சில் குசேலன் பாடல்கள் ஒலிக்கப்போகிறது.
ரஜினி ரசிகர்களை கவரும் விதத்தில் குசேலன் ரஜினி படம் பொறிக்கப்பட்ட தொப்பிகள், டி-சர்ட் உள்ளிட்டவைகளும் இந்த பஸ் மூலம் விநியோகிக்கப்பட உள்ளது. இவைகள் தவிர இது வரையில் வெளியிடப்படாத குசேலன் திரைப்பட புகைப்படங்களும் இந்த பஸ்சில் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த பஸ்சை “போலாம் ரைட்” என்று விசில் அடித்து ஓ.கே சொல்லிவிட்டார் சூப்பர் ஸ்டார்.
இங்கே சொடுக்கி குசேலன் மேலும் செய்திகளை படிக்கலாம்
http://cinema.nellaitamil.com/t/

Read more...

இரட்டை அர்த்தங்களை துறந்தார் எஸ்.ஜே.சூர்யா

Thursday, June 26, 2008

நெல்லை மாவட்டம் வாசுதேவநல்லூர் பகுதியை சேர்ந்த சாதாரண இளைஞன். 10 ஆண்டு கடுமையான போராட்டங்களுக்கு பின்பு சினிமா துறையில் இயக்குனராக வெற்றி பெற்று நடிகராக வலம் வந்து கொண்டிருக்கிறார். இவர் நியூட்டனின் மூன்றாம் விதி படத்தில் நடித்துக்கொண்டிருக்கும் நிலையில் தனது வருங்கால திட்டங்கள் தொடர்பாக நெல்லை தமிழ் இணையத்துக்காக எஸ்.ஜே.சூர்யாவின் தொலைபேசி பேட்டி....
ஒரு படத்துக்கும் இன்னொரு படத்துக்கும் ஏன் இத்தனை கால இடைவெளி ?
இத்தனை காலம் இடைவெளி எனக்கும் கொஞ்சம் தொடர்பாக எனக்கும் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருக்கிறது. ஆயினும் இயக்குனர் அல்லது நடிகர் எந்த பரிமானம் எடுத்தாலும் படத்தை ரசித்து பண்ண வேண்டும் என்பதே என் விருப்பம்.
நியூட்டனின் மூன்றாம் விதி சூட்டிங்கின் போது காயம் ஏற்பட்டதாமே...
லேசான காயம் தான். ஆயினும் இது சரியானதும் தொடர்ந்து படத்தில் நடித்து வருகிறேன். படத்தில் அதிரடி காட்சிகள் நிறைய படமாக்கப்பட்டு வருகிறது.
விஜய், அஜித் என்று பல நட்சத்திரங்களை உச்சத்துக்கு கொண்டு வந்தவர் என்ற முறையில் ஏதேனும் ஒரு சில வார்த்தை...
குஷி படத்தில் நடிகர் விஜய் நடித்தர். வாலி படத்தில் நடிகர் அஜித் நடித்தார். இப்படங்களில் இவர்களின் நடிப்பு திறமையால் படம் வெற்றி பெற்றது. என் பங்கும் இதில் உண்டு என்றாலும் திறமை உள்ளவர்களுக்கு களம் எங்கு வேண்டுமானாலும் இருக்கும்.
தொடர்ச்சி..... சொடுக்கவும்

மேலும் சினிமா செய்திகள்.....

தசாவதாரம் - வசூல்ராஜா 2008?

கார்த்திகை பட தயாரிப்பாளர் கோர்ட்டுக்கு செல்ல முடிவு

தயாரிப்பாளர் சங்கத்தேர்தலில் ராதிகா போட்டி

அதிக சம்பளம் கேட்கும் நடிகை

இந்தியில் நடிக்க போகிறார் ஸ்ருதி கமலஹாசன்

Read more...

ஜகன்மோகினியில் நமீதா துணிச்சல்

Wednesday, June 25, 2008

ஜகன்மோகினி மேலும் ஸ்டில்கள்...http://tamilers.com/upcoming.php

Read more...

த்ரிஷா நடித்த படப்பிடிப்பில் விபத்து : இருவர் பலி

Monday, June 23, 2008

சென்னை அண்ணா சாலையில் உள்ள பார்சன் கட்டிட வளாகத்தில் நடிகர் ஆர்யா மற்றும் த்ரிஷா நடித்து வரும் சர்வம் திரைப்பட பிடிப்பு நடந்து வருகிறது. லிப்ட் அமைப்பதற்கான பணிகளில் தொழில்நுட்ப பணியாளர்கள் இருவர் ஈடுபட்டிருந்தனர்.
எதிர்பாராதவிதமாக லிப்ட்டின் ஒரு கம்பி அறுந்தது. இதையடுத்து மேலிலிருந்து பலத்த சப்தத்துடன் லிப்ட் விழுந்து நொறுங்கியது. இதில் சிகாமணி, உதயக்குமார் ஆகிய இருவர் சுமார் 100 அடி உயரத்தில் இருந்து விழுந்தனர். இதனால் இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர். மேலும் அப்பு என்பவரும் படுகாயமடைந்த நிலையில் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சூட்டிங் ரத்து
இச்சம்பவம் தொடர்பாக தகவல் அறிந்ததும் இப்பட சூட்டிங் ரத்து செய்யப்பட்டது. அரங்க மேலாளர் செளந்தரராஜன், லிப்ட் ஆபரேட்டர் முருகன் ஆகியோரை போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP