வேர்ட்பிரசுடன் நடத்திய போராட்டத்தில் வெற்றி
Monday, July 14, 2008
தனி மனித போராட்டங்களை நாளுக்குநாள் நாம் கண்கூடாக பார்த்து வருகிறோம். ஆனால் வேர்ட்பிரஸ் நீட்சியை சொந்த சர்வரில் இணைக்க கத்துக்குட்டிகள் படும் பாடு இருக்கிறதே சொல்லி மாளாது. இந்த வகையில் நான் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக படாத பாடுபட்டு http://cinema.nellaitamil.com/t/
என்ற தளத்தை சோதித்து பார்த்துக்கொண்டிருக்கிறேன். தமிழில் தகவல் எழுத ஆர்.எஸ்.எஸ். முறை உள்ளதால் இத்தளம் மற்ற தளங்களை போன்று சர்ச் என்ஜினில் விரைவாக செயல்படும் என்று நம்புகிறேன். இத்தளத்தில் வீடியோ மற்றும் புகைப்படங்களை இணைப்பது தான் எப்படி என்பது தெரியவில்லை.
நன்றிகள்:
இலங்கையில் இருந்து ஊரோடி இணைய அன்பர் பகீரதன் அவர்களுக்கு மிக்க நன்றி. என்போன்ற வலை பதிவர்களுக்கு உதவும் வகையில் சொந்த தளத்தில் வேர்ட்பிரஸ் பதிவொன்றை இடுவதாக கூறியுள்ளார். அவரது பதிவு வெளிவருவதற்கு முன்னரே அட்வான்ஸ் வாழ்த்துக்கள்
குறிப்பு
வேர்ட் பிரஸ் வித்தைகள் தெரிந்த நண்பர்கள் புகைப்படம் மற்றும் வீடியோ பைல்களை பதிவேற்றுவது தொடர்பாக விளக்கி கூற முடியுமா...