நான் அம்மாவும் இல்லை - எனக்கு குழந்தையும் இல்லை - த்ரிஷா

Sunday, February 27, 2011

த்ரிஷா நடிக்க வந்து பல வருடங்கள் ஆகிவிட்டன. அதனால் காதலிக்கிறார் என்று பேசப்பட்டு வந்தது போய் இப்போது கல்யாணம் செய்துகொண்டார், குழந்தை பெற்று அம்மாவாகிவிட்டார் என்று பேசப்படுகிறது.தமிழில் அஜீத்துடன் மங்காத்தா படத்திலும், தெலுங்கில் தீன்மார் படங்களில் நடித்து வரும் த்ரிஷா இந்த பேச்சுகளுக்கு விளக்கம் அளித்துள்ளார்.அவர், ’’எனக்கு அரசியல் புள்ளி ஒருவரின் மகனுடன் திருமணம் நடந்துவிட்டதாக வதந்திகள் கிளம்பியது. இப்போது தொழில் அதிபருடன் திருணம் செய்து கொண்‌டதாக வதந்தி. ஆனால் இதனை பலமுறை மறுத்து விட்டேன், ஆனாலும் தொடர்கிறது.


அதுகூட பரவாயில்லை எனக்கு குழந்தை இருப்பதாக கூட சிலர் வதந்திகள் பரப்புகின்றனர்.


நான் யாரையும், ரகசிய திருமணம் செய்யவில்லை, அவ்வாறு செய்ய எனக்கு அவசியமும் இல்லை. எனது திருமணத்தை ஊர் அறிய உலகறிய நடத்துவேன்.

கண்டிப்பாக ரகசிய திருமணம் செய்யமாட்டேன்’’ என்று தெரிவித்துள்ளார்.

நன்றி: நக்கீரன்

Read more...

கே.ராஜேஷ்வரின் மகன் அறிமுகமாகும் "திடீர் நகரில் ஒரு காதல் கானா"

Sunday, November 14, 2010


'அமரன்', 'அதே மனிதன்', 'துறைமுகம்', 'கோவில்பட்டி வீரலட்சுமி', 'கலைஞரின் நியாயத்தராசு', 'இதயத்தாமரை' உட்பட பல படங்களை இயக்கியிருக்கும் கே.ராஜேஷ்வர் தம், மகனை ஹீரோவாக வைத்து "திடீர் நகரில் ஒரு காதல் கானா" என்ற படத்தை இயக்குகிறார்.

இந்தியில் பல கோடிகளை வசூல் செய்து சாதனைப் படைத்த 'அசப் பிரெம்ஜி கசப்கஹானி' படத்தின் ரீமேக்தான் இப்படம். கே.ராஜேஷ்வர் எழுதிய இந்த கதையை, பிரபல இயக்குநர் ராஜ்குமார் சந்தோஷி இந்தியில் இயக்கினார். தமிழில் கே.ராஜேஷ்வர் தம் மகன் ரஞ்சனை ஹீரோவாக வைத்து இப்படத்தை இயக்குகிறார். இதற்காக சண்டை, நடனம், நடிப்பு என கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டப் பிறகே இந்த படத்தில் ஹீரோவாக நடிக்க முன்வந்தாராம் ரஞ்சன். இவருக்கு ஜோடியாக மும்பையை சேர்ந்த முன்னணி மாடல் அழகி ஒருவர் நடிக்க இருக்கிறார். மற்ற நட்சத்திரங்களின் தேர்வு நடைபெற்று வருகிறது.

ஆதித்யான் இசையமைக்கும் இப்படத்தின் பாடல்களை வைரமுத்து எழுதுகிறார். ஜி.பி.கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்ய, ரகுபாப் படத்தொகுப்பு செய்கிறார். கலை பிரபாகர், தயாரிப்பு மேற்பார்வை ஏ.கே.சேகர், மக்கள் தொடர்பு விஜயமுரளி.

ஐகான் எண்டர்டெயின்மென்ட் பிரைவேட் லிமிடெட் நிறுவனமும் பிலிம் மேஜிக் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்தின் துவக்க விழா இன்று (நவம்பர் 12) சென்னையில் நடைபெற்றது. இதில் சிம்ரன், பாலுமகேந்திரா மற்றும் பல ஏராளமான திரைபிரமுகர்கள் கலந்துகொண்டார்கள்.

இந்த துவக்க விழாவின் போது ராஜன்பிள்ளையின் வாழ்க்கையில் நடைபெற்ற சம்பவத்தை அடிப்படையாக வைத்து டாக்டர் ஜே.ராஜ்மோகன் பிள்ளை, கே.கோவிந்தன் குட்டி ஆகிய இருவரும் சேர்ந்து எழுதியுள்ள "நீதியின் கொலை" என்ற புத்தகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் வெளியிடப்பட்டது.

Read more...

தீபாவளிக்கு 4 படங்கள் வெளியீடு

Saturday, November 6, 2010


தனுஷ், ஜெனிலியா நடித்துள்ள உத்தம்புத்திரன், பிரபு சாலமன் இயக்கத்தில் புதுமுகங்கள் நடிப்பில் உருவான மைனா, அர்ஜுன், ஹரிப்பிரியா நடித்துள்ள வல்லக்கோட்டை, புஷ்கர்- காயத்ரி இயக்கியுள்ள வ-குவாட்டர் கட்டிங் ஆகிய படங்கள் திரைக்கு வந்துள்ளன.

மேலும், ‘ஸ்டிரீட் டான்ஸ்’ என்ற 3 டி ஆங்கிலப் படத்தின் தமிழாக்கமும் இன்று வெளியிடப்பட்டுள்ளது.

மைனா படத்தை உதயநிதி ஸ்டாலின் திரையிடுகிறார். புதுமுக நாயகன் விதார்த், சிந்து சமவெளி நாயகி அமலாபால் ஆகியோர் நடித்துள்ள இந்தப் படம் 170 திரையரங்குகளில் வெளியாகியுள்ளது.

வ-குவாட்டர் கட்டிங் படத்தை வினியோகித்துள்ளது தயாநிதி அழகிரி. புஷ்கர்- காயத்ரி தம்பதி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ‘மிர்ச்சி’ சிவா, லேகா வாஷிங்டன் நடித்துள்ளனர். இந்தப் படம் 150 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

வெங்கடேஷ் இயக்கத்தில், அர்ஜுன், ஹரிப்பிரியா நடிப்பில் உருவான ‘வல்லக்கோட்டை’ 180 திரையரங்குகளில் திரையிடப்பட்டுள்ளது.

மேலும் 20க்கும் மேற்பட்ட சிறிய பட்ஜெட் படங்கள் படபிடிப்பு முடிந்தும், திரையரங்குகள் கிடைக்காததால் வெளியிடப்படாமல் முடங்கிக் கிடக்கின்றன.

Read more...

நேபாள ‌தொழிலதிபரை மணக்கிறார் மனீஷா கொய்ராலா

Wednesday, April 7, 2010

உயிரே, பம்பாய், முதல்வன், இந்தியன் உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்த பாலிவுட் நடிகை மனீஷா கொய்ராலா, நேபாளத்தை சேர்ந்த தொழிலதிபரை திருமணம் செய்யவுள்ளார். நேபாள நாட்டை சேர்ந்த இவர், முதலில்பேரி பேதுவாலா என்ற நேபாளி மொழி படத்தின் மூலம்தான் திரையுலகில் அறிமுகமானார். 1991ம் ஆண்டு வெளியான சவுதாகர் இந்திப் படம் மூலமாக, இந்திய திரையுலகில் பிரவேசித்தார். தற்போது 40 வயதாகும் மனீஷா கொய்ராலாவும், நேபாளத்தை சேர்ந்த தொழிலதிபர் சாம்ராத் தாகல் என்பவரும் கடந்த இரண்டு ஆண்டுகளாக காதலித்து வந்தனர். இந்நிலையில் இவர்கள் திருமணம் செய்து கொள்ள முடிவு செய்ததையடுத்து வருகிற ஜூன் மாதம் 19ம்தேதி திருமணம் செய்து கொள்ளப்போவதாக அறிவித்துள்ளனர். நேபாளம் காட்மாண்டு நகரில் நடைபெறும் திருமண நிகழ்ச்சியில் இருவீட்டு சொந்தங்கள் மற்றும் நண்பர்கள் கலந்து கொள்கிறார்கள். மணமகன் சாம்ராத் அமெரிக்காவில் படித்தவர். தற்போது மாற்று எரிசக்தி உற்பத்தி நிறுவனத்தை நடத்தி வருகிறார்.

Manisha Koirala, wedding, Nepalese bizman, Business man, June, தொழிலதிபர், திருமணம், மனீஷா கொய்ராலா,

Read more...

பத்மபூஷன் விருது பெற்றார் இளையராஜா

பத்மபூஷன் விருதினை இன்று நேரில் பெற்றார் இசைஞானி இளையராஜா.

இந்தியாவின் மிகச் சிறந்த இசையமைப்பாளர்களான இசைஞானி இளையராஜா மற்று ஏர் ஆர் ரஹ்மான் உள்ளிட்டோருக்கு பத்மபூஷன் விருது அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, சில தினங்களுக்கு முன் டெல்லியில் நடந்த பத்ம விருதுகள் வழங்கும் விழாவில் நேரில் போய் விருதினைப் பெற்றார் ஏஆர் ரஹ்மான்.

இளையராஜா பிறிதொரு நாளில் வாங்கிக் கொள்வதாக கூறிவிட்டதால், அவருக்கும் மேலும் சில கலைஞர்களுக்கும் இன்று பத்ம விருதுகள் வழங்கப்பட்டன.

டெல்லியில் இன்று நடந்த விழாவில் குடியரசுத் தலைவர் பிரதிபா பாட்டீலிடம் பத்மபூஷன் விருதினைப் பெற்றுக் கொண்டார் இளையராஜா.

இந்த கௌரவத்தை அளித்த இந்திய அரசுக்கு அனைத்துக் கலைஞர்கள் சார்பாகவும் நன்றி கூறுவதாகத் தெரிவித்தார் இளையராஜா.

இந்தி நடிகை ரேகா, நடிகர் சோயப் அலிகான் உள்ளிட்ட கலைஞர்களுக்கு இன்றைய விழாவில் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது

Read more...

திருமலையில் நாளை ரம்பா திருமணம்... பலத்த பாதுகாப்பு ஏற்பாடு!

பிரபல தமிழ் - தெலுங்கு நடிகை ரம்பாவுக்கும் கனடா நாட்டை சேர்ந்த இந்திரகுமார் (எ) பத்மநாபனுக்கும் நாளை (வியாழக்கிழமை) திருமலையில் உள்ள கர்நாடக கல்யாண மண்டபத்தில்

இந்த திருமணத்தில் தமிழ், தெலுங்கு, இந்தி, பெங்காலி மற்றும் போஜ்புரி திரைப்படத்துறையினர் மற்றும் சின்னத்திரை நடிகர்- நடிகைகள் ஏராளமானோர் பங்கேற்கின்றனர்.

நடிகை ரம்பா மற்றும் மணமகன் குடும்பத்தினர் ஏற்கெனவே திருமலையில் தங்கியுள்ளனர்.

இன்று காலை நடிகை ரம்பா தனது குடும்பத்தினருடன் ஏழுமலையான் கோவிலுக்கு சென்று சாமி தரிசனம் செய்தார். மாலை அவருக்கு பெண்ணழைப்பு சடங்குகள் நடக்கின்றன.

நாளை திருமணத்துக்கு வருபவர்களுக்கு காலையில் 15 வகை சிற்றுண்டிகளும், பிற்பகல் 35 வகையான அறுசுவை விருந்தும் வழங்கப்படுகிறது.

திருமணத்திற்கு அதிகமாக நடிகர் நடிகைகள் வருவார்கள் என்பதால் முன் எச்சரிக்கையாக திருமலையில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

தனக்கு திருமணம் கூடி வந்தால், திருமலையில் செய்து கொள்வதாக ரம்பா வேண்டிக் கொண்டிருந்தாராம். அதனால்தான் இங்கு திருமண ஏற்பாடுகள் செய்துள்ளார்களாம்.

Read more...

இளையராஜா புகார்! சி.டி., கடையில் ரெய்டு!!

இசையமைப்பளார் இளையராஜா கொடுத்த புகாரின்பேரில் சென்னையில் சி.டி., கடைகளில் போலீசார் திடீர் ரெய்டு நடத்தினார்கள். பிரபல இசையமைப்பாளர் இளையராஜா, எக்கோ ரிக்கார்டிங் நிறுவனம் மீது சமீபத்தில் பரபரப்பு புகார் அளித்தார். இதையடுத்து சென்னை போலீஸ் கமிஷனரை சந்தித்து புகார் மனு ஒன்றையும் கொடுத்திருந்தார். தான் இசையமைத்த சினிமா பாடல்களின் ஒலி நாடாக்கள் மற்றும் குறுந்தகடுகள் வெளியிட்டது தொடர்பாக தனக்கு கொடுக்க வேண்டிய ராயல்டி தொகையை எக்கோ ரிக்கார்டிங் நிறுவனம் கொடுக்கவில்லை என்றும் புகாரில் தெரிவித்திருந்தார். இதையடுத்து புகாரை வழக்காக பதிவு செய்த போலீசார், சென்னை ஆழ்வார்பேட்டையில் உள்ள ஏவி.எம். மியூசிக் சோன், சரஸ்வதி ஸ்டோர் ஆகிய கடைகளில் ‌திடீர் சோதனை நடத்தினார்கள். அங்கு அனுமதி பெறாமல் இருந்த 179 சினிமா பாடல் சி.டி.,க்களை பறிமுதல் செய்திருப்பதாக கூறிய குற்றப்பிரிவு போலீசார், கோபாலபுரத்தில் உள்ள எக்கோ ரிக்கார்டிங் நிறுவனத்திலும் சோதனை நடத்தவிருப்பதாக கூறியுள்ளனர்.

DMR NEWS

Read more...

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP