இந்த குழந்தை யார்?
Tuesday, September 23, 2008



இந்த குழந்தை இந்திய திரையலகின் ஒரு முன்னணி நட்சத்திரம். இவர் கண்கள் காந்தம் போன்று ரசிகர்களை இழுப்பது... இவர் இப்போது தமிழக ரசிகர்கள் மத்தியில் மையம் கொள்ள போகிறார்... இவர் யார்?
சொடுக்குங்கள்



இந்த குழந்தை இந்திய திரையலகின் ஒரு முன்னணி நட்சத்திரம். இவர் கண்கள் காந்தம் போன்று ரசிகர்களை இழுப்பது... இவர் இப்போது தமிழக ரசிகர்கள் மத்தியில் மையம் கொள்ள போகிறார்... இவர் யார்?
சொடுக்குங்கள்
வாடா... வாடா... ஓம் பணத்துக்கும் எம் பணத்துக்கும் போட்டுப்பார்ப்போம் என்று நடிகர் வடிவேலு ஒரு படத்தில் நகைச்சுவை வசனத்தை பேசி நடிப்பார். இப்போது நிஜத்தில் இப்படி பேசி இருக்கிறார்.
நேற்று முன்தினம் வடிவேலு வீட்டின் மீது விஜயகாந்த் ரசிகர்கள் கல்வீசி தாக்கியுள்ள சம்பவம் திரைத்துறை மற்றும் அரசியல் வட்டாரங்களில் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியுள்ளது. நாகரீக அரசியல் பேசும் விஜயகாந்த் கட்சியினர் இது போன்று நடந்து கொண்ட சம்பவம் திராவிட கட்சிகளின் செயல்களை தூக்கி சாப்பிட்டு விட்டது.
இந்த தாக்குதல் சம்பவம் தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய வடிவேலு சற்றே காட்டமாக விஜயகாந்தை ஒரு பிடி பிடித்திருக்கிறார்.
நான் ஒரு நகைச்சுவை நடிகன். என்னை தாக்கி விட்டு எந்தக் கோட்டையை இவர் பிடிக்கப் போகிறார் என்று தெரியவில்லை. என்னை அடித்துதான் இவர் கோட்டையைப் பிடிக்க வேண்டுமா?. ஒரு இடத்தில்தான் ஜெயித்திருக்கிறார். அதற்கே இப்படியா?. என்னை எதற்காக குறி வைக்கிறார் என்று தெரியவில்லை. கடந்த ஒரு வருடமாகவே என்னை தாக்கி வருகிறார்கள். பலமுறை கொலை மிரட்டல்கள் விடுத்துள்ளனர். இதையெல்லாம் நான் வெளியில் சொல்லாமல் இருக்கிறேன்.
செய்தியை தொடர்ந்து படிக்க... பின்வரும் நெல்லைதமிழ் விளம்பரத்தை சொடுக்குக...

இந்தப்புகைப்படத்தை பார்த்ததும் எனக்கே ஆச்சர்யமாகி விட்டது. எவ்வளவு அழகாக இருக்கிறார் கரீனா கபூர்... சரி நீங்களும் பார்க்கத்தான் இந்த ஏற்பாடு.
ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் முதலில் மகிழ்ச்சி அடையும் நபர் நான் தான் என்று ரசிகர் மன்றங்களின் தலைமை பொறுப்பு வகிக்கும் சத்ய நாராயணா கூறியுள்ளார்.
பிரபல தமிழ் நாளிதழ் ஒன்றுக்கு சத்யநாராயணா அளித்துள்ள பிரத்யோக பேட்டியில் இருந்து...
ரஜினி அரசியலுக்கு வருவாரா, ரசிகர்களை அவர் அக்டோபர் மாதம் சந்திப்பதன் நோக்கம் குறித்து அவர் விரிவாக இதில் கூறியுள்ளார்.
ரஜினியை மட்டுமல்ல… உங்களை சந்திப்பதுகூட ரசிகர்களுக்கு குதிரைக் கொம்பாகி விட்டதே…?
அப்படியெல்லாம் இல்லை. ரசிகர்கள் என்னைச் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்களைத் தவிர்க்கவேண்டிய அவசியமும் எனக்குக் கிடையாதே!
http://nellaitamil.com/view.php?page=907
தமிழ்மணத்தில் ஆபாசம் இல்லாத படைப்புக்களை வெளியிட நினைத்து துவங்கப்பட்டது தான் நெல்லை தமிழ் வண்ணத்திரை. சொந்த தளத்தில் இருந்து எவ்வித கவர்ச்சியான புகைப்படங்களையும் வெளியிடாமல் சுயகட்டுப்பாட்டுடன் இதுவரையில் பதிவுகள் இடப்பட்டு வந்தன. இந்நிலையில் தமிழ்மணம் என்ன காரணத்தினால் இப்பதிவுகளை மட்டறுத்தல் செய்தது என்று தெரியவில்லை.
இதன் மூலம் தமிழ்மணம் கூறும் கட்டுப்பாடுகளை கடைப்பிடிக்க கூடாது என்பது மட்டும் உறுதியாக தெரிகிறது. வழக்கமாக முகப்பில் பதிவுகளை தெரிய வைக்க கூடாது என்பதில் தமிழ்மணத்திற்கு இத்தனை காட்டம் என்று தெரிவில்லை.
நெல்லை தமிழ் வண்ணத்திரை இதழ் இனி முழுக்க முழுக்க சினிமாத்தனமாக கவர்ச்சியான புகைப்படங்கள்.... சினிமா கிசு கிசு செய்திகளுடன் வெளிவரும். கட்டுப்பாடு என்று வந்தால் அதை முறையாக கடைபிடிக்க வேண்டும். இல்லை என்றால் பதிவர்கள் தடம் புரள்வது என்பது மட்டும் நிச்சயம்.
குறி்ப்பு : தொடர்ந்து எங்காவது ஒரு மூலையில் இடுகைகள் தெரியவாவது வாய்ப்பளிக்கும் தமிழ்மணத்திற்கு நன்றி.
திருட்டுப்பயலே படத்தின் மூலம் “ஆன்டி” ஹீரோவான ஜீவன் இப்போது நடித்து வரும் படம் கிருஷ்ணலீலை. இப்படத்தில் மேக்னாவுடன் டான்ஸ் ஆடும் போது ஜீவன், அவரிடம் விளையாடி விட்டாராம். அந்தளவுக்கு நெருக்கமான நடிப்பை வெளிப்படுத்திய பாடல் காட்சிக்கான புகைப்படங்களை அப்படத்தின் பி.ஆர்.ஓ. நம்மிடம் அளித்தார். ஜீவன் படத்தில் வழக்கமாக இடம் பெறும் அஜால்குஜால் காட்சிகள் இப்படத்திலும் இடம்பெற்றுள்ளன.
செய்தி தொடர்ச்சி மற்றும் புகைப்படங்களுக்கு சொடுக்கவும்
இந்திர லோகத்தில் நா.அழகப்பன் படத்திற்கு பின்னர் வடிவேலுவுக்கு ஏற்பட்ட தொய்வை பயன்படுத்திக்கொண்ட நடிகர் கவுண்டமணி நீண்ட நாட்களுக்கு பின்பு தங்கம் திரைப்படத்தில் நடித்தார். இப்படம் பொங்கலுக்கு ரிலீசாகி கணிசமான வசூல் மழையை தந்தது.
இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து வாசு. குசேலன் படத்தில் நடிக்க கவுண்டமணியை அனுகினார். ஆனாலும் குசேலனில் நடிக்க மறுத்துவிட்டார் கவுண்டமணி. ஆனால் சரத்குமாருடன் இணைந்து ஜக்குபாய் படத்தில் நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார். இப்படத்தில் கவுண்டமணியுடன் செந்தில் ஜோடி சேர்ந்து மறுபடியும் ஒரு ரவுண்ட் வர திட்டமிட்டுள்ளனர்.
செந்தில்-கவுண்டமணி ஜோடி வைதேகி காத்திருந்தால் முதல் கரகாட்டக்காரன் வரையில் பல்வேறு சூப்பர்ஹிட் படங்களின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தது. இடையில் இருவருக்கும் இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக பல படங்களை தவிர்த்து வந்தனர். இந்நிலையில் விட்ட இடத்தை பிடிக்க மீண்டும் ஜோடி சேர்கின்றனர் ஜக்குபாய் படத்துக்காக.
மேலும் செய்திகள்
மதுலிகா கேலரி...
குசேலன் வண்டி வருது... விலகு விலகு...
http://tamilers.com/upcoming.php
வாங்கடா வாங்க… என் வண்டிக்கு பின்னாலே… குசேலன் வண்டி வருது… விலகு… விலகு… என்று பாட்டுப்பாட போகிறார்கள் ரஜினி ரசிகர்கள். இதற்கு முக்கிய காரணம்.. ரஜினி நடித்த குசேலன் படத்திற்காக பிரத்யோகமாக பஸ் ஒன்று வடிவமைக்கப்பட்டு தமிழகம் முழுவதும் சுற்றப்போகிறது.
குசேலன் பஸ் முழு அளவில் ரஜினி மற்றும் நயன்தாரா ஆகியோரின் படங்களை கொண்டு வண்ணம் தீட்டப்பட உள்ளது. இந்த பஸ்சில் குசேலன் பாடல்கள் ஒலிக்கப்போகிறது.
ரஜினி ரசிகர்களை கவரும் விதத்தில் குசேலன் ரஜினி படம் பொறிக்கப்பட்ட தொப்பிகள், டி-சர்ட் உள்ளிட்டவைகளும் இந்த பஸ் மூலம் விநியோகிக்கப்பட உள்ளது. இவைகள் தவிர இது வரையில் வெளியிடப்படாத குசேலன் திரைப்பட புகைப்படங்களும் இந்த பஸ்சில் விநியோகம் செய்யப்படுகிறது.
இந்த பஸ்சை “போலாம் ரைட்” என்று விசில் அடித்து ஓ.கே சொல்லிவிட்டார் சூப்பர் ஸ்டார்.
இங்கே சொடுக்கி குசேலன் மேலும் செய்திகளை படிக்கலாம்
http://cinema.nellaitamil.com/t/


ஒரு பதிவர் (பெயரை குறிப்பிட விரும்பவில்லை தமிழ்சினிமா மற்றும் நெல்லைதமிழ் இணையதளம் துவங்கப்பட்ட பின்னர் எங்களை மெயில் மூலம் தொடர்பு கொண்டார். நான் பிரபல நாளிதழில் பணிபுரிவதாக கூறியதுடன் நெல்லை தமிழ் இணையத்தில் பங்கு கொள்ள தயார் என்று கூறினார். அதற்கு முன்னதாக நெல்லை தமிழ் இணையத்தில் சினிமா தொடர்பான செய்திகளை அதிகளவில் இடம் பெற செய்தால் நல்லது என்று கூறினார். சினிமா புகைப்படங்களுக்கு சென்னையில் நிருபர் இருப்பதாகவும் அவருக்கு மாதா மாதம் 1000 ரூபாய் பணம் கொடுக்க வேண்டியதிருக்கிறது என்று கூறி அட்வான்சாக 500 ரூபாய் பணம் வாங்கிக்கொண்டார். நானும் நெல்லை மாவட்டத்துக்காரர் தானே ஏமாற்ற மாட்டார் என்று நினைத்தேன். அதன் பின்பு தான் தெரிந்தது மாதா மாதம் பணம் கொடுக்கவேண்டும் என்ற தகவலே... இடையில் தசாவதாரம் படக்காட்சிகளை வாங்க இவ்வளவு பணம் கொடுக்க வேண்டும்... குருவி எக்ஸ்குளுசீவ் ஸ்டில்கள் வாங்க இவ்வளவு ரூபாய் என்று சொல்லி பணம் கறக்கும் முயற்சிகளில் ஈடுபட்டார்.
நாங்கள் கொஞ்சம் உஷாராக இருந்ததால் அவர் வலையில் இருந்து மீண்டோம் இல்லையென்றால் எங்களது நெல்லை தமிழ் இணையத்தின் வெப் சர்வரையே கொடுத்து தொலைத்திருக்கவேண்டும்.
இந்த லட்சணத்தில் தான் தானும் ஒரு வலைப்பூவை தொடங்கி முழுக்க முழுக்க எழுத்து வியாபாரியாகவே மாறியிருக்கிறார். படுக்கையறை.... முத்தக்காட்சி என்று பின்னி பெடலடுத்துக்கொண்டிருக்கிறார்.
இவரது வலைப்பூவிற்கு வாசகரை வரவேற்கும் விதமாக அவரே மறுமொழிகளை பல்வேறு அனானி பெயர்களில் எழுதி தமிழ்மணத்தின் மறுமொழிகள் பட்டியலில் இடம் பிடித்து விடுகிறார். இந்த பதிவரின் இடுகைகள் தமிழ்மணத்தின் பிரதான பகுதியில் இப்போது இடம் பெறாமல் போனதற்கான காரணம் முழுக்க முழுக்க சினிமாவை வைத்து எழுத்து வியாபாரம் செய்வது தான்.
எழுத்து வியாபாரம் செய்வது குறித்து பேச உனக்கு என்ன யோக்கியதை இருக்கிறது.... நீயும் ஒரு பதிவில் சுஜிபாலா குறித்து பேஜாரான தலைப்பை போட்டவன் தானே என்று நீங்கள் கேட்பது எனக்கும் தெரியும். இந்த பதிவும் கூட தமிழ்மணம் வாசகர்களின் நாடித்துடிப்பை அறிவதற்கு தான் போடப்பட்டது. ஆனாலும் இப்படி செய்வது சரியல்ல என்று மூத்த பதிவர்கள் சுட்டிக்காட்டிய பின்பு அதையும் நிறுத்தி விட்டோம்.
இந்த சூழலில் நாங்கள் இதையெல்லாம் ஏன் சுட்டிக்காட்டுகிறோம் என்றால் தமிழ்மணத்தில் சினிமா தனமான இடுகைகள் இடம் பெறக்கூடாது என்பதற்காக அல்ல. ஆபாச வலைகள் விரிக்கப்படுவதை தவிர்ப்பதற்காகத்தான்.
குறிப்பி்ட்ட பதிவர் யார் என்பது உங்களுக்கு தெரிந்திருக்கும். இவரின் திருவிளையாடல்கள் இப்போதும் தொடர்கின்றன. தமிழ்சினிமா பதிவுகளுக்கு அனானி பெயரில் யோசனைகள் என்ற பெயரில் திசைதிருப்பும் மறுமொழிகளை போடுவதுடன் அப்படி செய்தால் நல்லது... இப்படி செய்தால் நல்லது என்று விமர்சனம் செய்து வருகிறார்.
இதற்கிடையே குறைந்த நாட்களில் 10 ஆயிரம் பேர் வலைத்தளத்தை பார்த்தார்கள்... என்று கோவை சரளா ரேஞ்சில் இ.மெயிலுக்கு மெசேஜ் வேறு அனுப்புகிறார். இதே போன்று படுக்கையறை தொடர்பான தகவல்களை கொடுத்து எழுத்து வியாபாரம் செய்தால் குமுதம் ரேஞ்சுக்கு கூட போகலாம். ஆனால் தமிழ்மணம் போன்ற பல பதிவர்கள் கூடும் இடத்தில் மலத்தை கொட்டியது போல இப்பதிவர் செயல்படுவது பலருக்கும் தெரியும். சிலர் தங்கள் பதிவுகளில் இதை அங்கலாய்பாகவும் சொல்லியிருக்கிறார்கள். அது சரி இது போன்ற எழுத்து வியாபாரங்கள் குறித்து இவ்வளது தூரம் நாங்கள் எழுதியிருக்க தேவையில்லை. விமர்சனங்களை எதிர்நோக்க காத்திருக்கிறோம்.
இதை விட கொடுமை புதிதாய் இந்த பதிவர் துவங்கப்போகும் இணையத்திலும் இதே போன்று வக்கிரமான வார்த்தைகளை தெளித்து விளம்பர வருவாய் பெற்று மகிழ வாழ்த்தக்கள். நன்றி.
© Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008
Back to TOP