பாம்புகள் என் செல்லப்பிராணி - நடிகை மோனிகா

Tuesday, February 23, 2010

பாம்பு என்றாலே படை நடுங்கும். தொடை நடுங்கும் என்றெல்லாம் அச்சப்பட்டாலும், சினிமாவை பொறுத்தவரை பாம்பு சென்ட்டிமென்ட் பணக்கார சென்ட்டிமென்ட். அதாவது பாம்பை வைத்து படமெடுத்தால் அது ஹிட்!

இந்த நம்பிக்கையோடு வந்திருக்கிறது நஞ்சுபுரம். ராகவ், மோனிகா ஜோடியுடன் நு£ற்றுக்கணக்கான பாம்புகளும் இதில் நடித்திருப்பதுதான் விசேஷம். "பொதுவா பாம்பு கதைன்னா ஒரு பொண்ணு பாம்பா மாறி பழிவாங்குவா. கால காலமா இப்படிதான் இருந்திருக்கு. ஆனால் நாங்க வேற மாதிரி கதையை சொல்லியிருக்கோம்" என்றார் இயக்குனர் சார்லஸ்.



முதலில் மிஸ்டர் பாம்பு ராசாவை கண்டு பயந்த படத்தின் நாயகி மோனிகா, படம் முடியும்போது இப்படி செல்லமா பழகிய பாம்பை விட்டு பிரியுறமே என்று கவலைப்படுகிற அளவுக்கு திக் பிரண்டாகிவிட்டாராம் அவைகளிடம். "வீட்ல பெட் அனிமலா கூட வளர்க்கலாம். அந்தளவுக்கு பாம்புங்க ரொம்ப நல்ல பசங்க" என்று சிபாரிசு பண்ணுகிற அளவுக்கு தைரியமாகி விட்டார் மோனிகா.

படத்தின் ஹீரோ ராகவ் சின்னத்திரை பிரபலம் கூட. இந்த படத்தில் நடிப்பதற்காக நிறைய மெனக்கட்டிருக்கிறார். அதுபோக நஞ்சுபுரம் படத்தின் இசையமைப்பாளரும் இவர்தான். வசந்தின் ஏய் ரொம்ப அழகா இருக்கே படத்தில் ஒரு பாடலுக்கு இசையமைத்தவர் இவர். அதன்பின் இந்த படத்தில் முழு இசையமைப்பாளராக உயர்ந்திருக்கிறார். பாம்பு படம்னா மகுடிக்கு ரொம்ப முக்கியத்துவம் இருக்கும். இந்த வழக்கத்தையும் இந்த படத்திலே உடைச்சிருக்கோம் என்றார். வில்லேஜ் கதை என்றாலும் ஒரு பாடலை ராப் ஸ்டைலில் முயற்சி செய்திருக்கிறாராம்.

"பாம்புகளை பற்றிய நம்பிக்கைகள் நம்மிடம் நிறைய இருக்கு. அதையெல்லாம் தெளிவு படுத்துற படமாகவும் இது இருக்கும்" என்கிறார் சார்லஸ். படமெடுக்கிற பாம்பை வைச்சு படமெடுக்கிறாங்க. வசூலை வச்சு நாலைஞ்சு படம் எடுக்கிற அளவுக்கு நாகராஜா ஆசிர்வதிக்கப்பட்டும்...


readmore...

0 comments:

About This Blog

Lorem Ipsum

  © Blogger templates Newspaper by Ourblogtemplates.com 2008

Back to TOP